AAY, PHH ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு! ஒரே கல்லில் 2 மாங்காய்.. நாளைக்கு மட்டும் மறந்துடாதீங்க!
சென்னை: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளும், உணவுப் பொருள் விநியோகமும் ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொது விநியோக திட்ட பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி சான்று, தொலைபேசி எண் பதிவு ஆகியவற்றை மேற்கொள்ள நாளை ( சனிக்கிழமை 09.05.2026 ) அன்று பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.
குடும்ப அட்டை
ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழக முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது விநியோக திட்டம்
இந்நிலையில், பொது விநியோக திட்ட பயனாளிகளுக்காக வரும் சனிக்கிழமை (12ஆம் தேதி) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக மே-2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 09.05.2026 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
பெயர் சேர்த்தல்
மேற்படி முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கலாம்.
குறைதீர் முகாம்
கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு அளிக்கலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் மனு அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் மனு அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி குறைதீர் முகாமில் கலந்து கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம்.
குடும்ப அட்டைதாரர்கள்
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கொள்ளப்படுகிறார்கள். பிற மாவட்டங்களில் மண்டல, வட்ட வழங்கல் அதிகாரிகள் அளவில் இந்த குறைதீர் முகாம்கள் நடத்தப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு நலத்திட்ட உதவிகள்
தமிழகத்தில் தற்போது அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில்,பலவேறு நலத்திட்டங்கள் ரேசன் கார்டுகள் மூலம் தான் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் மூலம், புதிதாக திருமணமானவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் தற்போது புதிதாக பொறுப்பேற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். அதற்காக இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications