ரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன், ஆனால்... கமல் கட்சியில் இணைந்த பொன்ராஜ்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு மாதமே மீதமிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதீப் பங்கீடு பணிகளில் பிஸியாக உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பிப்ரவரி 27 அன்று, மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அதேபோல் சட்டப்பஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதேபோல் இவரையும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மநீம பெருவெற்றிப் பெறச் செய்ய இக்கணம் முதல் அவர் தீவிரமாக செயலாற்றுவார். நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் நம்மை தேடி வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பொன்ராஜ், "அப்துல் கலாமின் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் பாஜக தடுத்தது. கமல் விடுத்த அழைப்பை ஏற்று, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன். ரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கான கொள்கைகளை உருவாக்கினேன். ஆனால், உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து வெளியேறிவிட்ட பிறகு, கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று இணைக்கிறேன். சமூக நீதி, அரசியல் நீதி, நீடித்த பொருளாதார நீதி அனைத்தும் மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications