லிப் லாக்.. கமலோடு ’மிக’ நெருக்கம்..ஊர் உலகத்துல யார் அப்படி இல்ல? அபிராமி கொடுத்த ’தக் லைஃப்’ பதில்
சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி நடிப்பில் தயாராகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முத்த காட்சி குறித்து பதிலளித்திருக்கிறார் நடிகை அபிராமி.
கமல்ஹாசன் மணிரத்னத்தோடு, முதன்முறையாக சிம்பு இணைந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சிம்பு, கமல்ஹாசன் உடன் அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறது.
படத்தின் டீசரும், ட்ரைலரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி என மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, ஏஆர் ரகுமான், அசோக்செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் திரிஷா மற்றும் அபிராமி உடன் மிக நெருக்கமாக கமல் நடித்திருந்தார். குறிப்பாக டிரைலரில் கமல் அபிராமி இடையிலான முத்தக்காட்சி இடம்பெற்று இருப்பது பெரிய விவாதம் ஆக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் நடிகை அபிராமி. இது தொடர்பாக பேசிய அவர்," வெறும் மூன்றே நொடிகள் மட்டும் வரும் முத்த காட்சி அது. ட்ரெய்லரில் இடம் பெற்றதால் தான் அந்த முத்த காட்சி குறித்து பலரும் தவறாக பேசி வருகிறார்கள். தவறாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. படத்தின் கதையோடு வரும் போது அந்த காட்சிக்கு முத்தம் தேவையானது என்பது படத்தை பார்த்தால் தான் தெரியும்.
இப்போதைக்கு அதை பற்றி பேசுவதும் தவறு. மேலும் வேறு எந்த நடிகரும் முத்தக் காட்சியில் நடித்ததே இல்லையா?. உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் நடித்தால் மட்டும் மக்கள் அதைப் பற்றியே பேச தொடங்கி விடுகிறார்கள். இப்போது படத்தில் நாயகன் நாயகி இடையே முத்தக் காட்சி, நெருக்கமான காட்சி என்பது எல்லாம் மிக சாதாரணமாகிவிட்டது" என கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் உடன் நடிகை அபிராமி நெருக்கமாக நடிப்பது இது ஒன்றும் புதிதல்ல. முதல் முறையும் அல்ல. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்த விருமாண்டி படத்தில் ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். அந்த படத்தில் தற்போது இருப்பதை விட பல மடங்கு நெருக்கமான காட்சிகள் இருக்கும். நொடிக்கு நொடி முத்த காட்சிகளும் வந்திருக்கும். குறிப்பாக லிப் லாக் காட்சிகள் அதிக அளவில் இருந்தது. 'உன்னை விட' பாடல் அப்போதைக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதற்குப் பிறகுதான் அபிராமிக்கு திரை வாழ்வில் சரிவு தொடங்கியதாக கூட சொல்லப்படுவது உண்டு. இந்த நிலையில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தின் மூலமே கம்பேக் கொடுத்திருக்கும் அபிராமி விருமாண்டி படத்தில் வருவது போலவே நெருக்கமாக நடித்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications