Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வாரம் யாரு எலிமினேஷன்.. நேற்றே க்ளூ கொடுத்த ஆண்டவர்?.. ரசிகர்கள் ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் 5 சீசனிலிருந்து இரண்டாவதாக அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நமிதா மாரிமுத்து அவராகவே வெளியேறியதாக பிக்பாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் நடந்த எலிமினேஷனில் நாடியா சாங் வெளியேறினார்.

அந்த வகையில் இந்த முறை யார் எலிமினேட் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன் படி யூடியூபர் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்படுவார் என சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ்

பிக்பாஸ்

அபிஷேக் ராஜா தனக்கு பிடித்த மாதிரி இந்த பிக்பாஸ் வீட்டை நடத்த முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தேவையின்றி அனைவர் குறித்தும் பேசுவது, தேவையில்லாத விஷயத்தில் அவர் மூக்கை நுழைக்கிறார் என்ற விமர்சனங்களும் அவர் மேல் உண்டு. நேற்று நடந்த டாஸ்க்கில் கூட மக்களுக்கு யார் போரிங்கான போட்டியாளர் என பிக்பாஸ் கேட்டிருந்தார்.

புழுகிய அபிஷேக்

புழுகிய அபிஷேக்

அதற்கு தேவையில்லாமல் இமான் அண்ணாச்சி ஜோக் என்ற பெயரில் சொல்வதற்கெல்லாம் எனக்கு சிரிப்பே வருவதில்லை என அபிஷேக் ராஜா தெரிவித்தார். அப்போது பிக்பாஸ் குறுக்கிட்டு நான் கேட்டது உங்களுக்கானது அல்ல, மக்களுக்கானது என்றார். அது போல் கடந்த வாரம் கமல்ஹாசனிடம் பேசிய அபிஷேக் ராஜா தான் இதுவரை பிக்பாஸே பார்த்ததில்லை என்றார்.

சந்தேகம்

சந்தேகம்

ஆனால் வீட்டில் இருந்த போட்டியாளர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்து எல்லாம் அபிஷேக் பேசியுள்ளார். அது போல் இந்த சீசனின் லாஸ்லியா, மதுமிதாதான் என்றும் அபிஷேக் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அபிஷேக்கிடம் கமல்ஹாசன் எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் நிஜமாகவே இங்க வருவதற்கு முன்னர் பிக்பாஸ் பார்த்ததில்லையா என கேட்டார்.

வீக் எண்ட்

வீக் எண்ட்

அதற்கு அபிஷேக் ராஜா, சத்தியமா பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் (கமல்) வீக் எண்டில் வரும் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன் என அபிஷேக் சொன்னார். அப்போ ஏதோ கொஞ்சம் பார்த்திருக்கீங்க, அப்படித்தானே என கமல், அபிஷேக்கை கலாய்த்தார். அப்படியும் ப்ரோமோதான் பார்த்திருக்கிறேன் என மீண்டும் சொன்னார்.

பிக்பாஸ் ரசிகர்கள்

பிக்பாஸ் ரசிகர்கள்

சமூகவலைதளங்களில் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர் அபிஷேக் ராஜா என தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடியாவை விட குறைந்த வாக்குகளை கொண்ட அபிஷேக் ராஜா வெளியேற்றப்படுவார் என கடந்த வாரம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்படுகிறார் என்ற செய்தி பிக்பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவலை பரப்பி வருகிறார்கள்.

கமல்ஹாசன் க்ளூ

கமல்ஹாசன் க்ளூ

இவர் எலிமினேட் செய்யப்படுவது குறித்து நேற்றே கமல்ஹாசன் சின்ன க்ளூவையும் கொடுத்துவிட்டார் என்கிறார்கள். காயின் எடுக்கும் டாஸ்கில் தாமரைச் செல்வி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அவருக்காக விளையாடியதாக அபிஷேக் ராஜா தெரிவித்திருந்தார். அதற்கு கமல்ஹாசன் உங்களை மக்கள் காப்பாற்றியிருப்பார்கள் என நம்புகிறீர்களா என கேட்டார். இதிலிருந்தே தெரிந்து விட்டது அபிஷேக் ராஜா வெளியேற்றப்படுகிறார் என்பது!. எனினும் இன்று இரவு வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் எலிமினேஷன் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+