ஆர்ப்பாட்டம் அடங்கவும், அமைச்சர் பதவி நிலைக்கவும் ஒரே தீர்வு நீட் தேர்வு நீக்கம்தான்.. வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்ப்பாட்டம் அடங்கவும், அமைச்சர் பதவி நிலைக்கவும் ஒரே தீர்வு நீட் தேர்வு நீக்கம்தான்.. என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், சிறுதுளியின் அடுத்த நிலை என்ன என்பதைப் பழமொழி அறிந்தவர்கள் அறிவார்கள்.. இது அரசுக்கு பின்னடைவாகிவிடும் என்று பேசப்பட்டால் நீட் தேர்வை மாநிலப் பட்டியலுக்கு மாற்றலாம்.. இரண்டில் ஒன்றை நாடு எதிர்பார்க்கிறது என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் அதிகரித்து சூழலில் கவிஞர் வைரமுத்து இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Vairamuthu NEET exam NEET protest Delhi

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு போராட்டங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரிலும் இன்றும் இளைஞர்கள் குவிந்துள்ளனர். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிட போவது இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே கூறியுள்ளார். மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு ரத்தே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

Vairamuthu NEET exam NEET protest Delhi

"சிறுதுளிகள் சேர்ந்துவிட்டன தில்லியிலே

சிறுதுளியின் அடுத்த நிலை என்ன என்பதைப் பழமொழி அறிந்தவர்கள் அறிவார்கள்

மழை வெள்ளத்திலும் வலியது மனித வெள்ளம்

வங்கதேசமும் நேபாளமும் இலங்கையும் அந்த வெள்ளத்தில் மூழ்கிய கதை மூத்தவர்கள் அறியாததில்லை

ஆர்ப்பாட்டம் அடங்கவும் அமைச்சர் பதவி நிலைக்கவும் ஒரே தீர்வு
நீட் தேர்வின் நிரந்தர நீக்கம்தான்

அரசுக்கு அது பின்னடைவாகிவிடும் என்று பேசப்பட்டால் சமரசத் தீர்வு ஒன்றும் இருக்கிறது

அதுதான் நீட் தேர்வை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது

இரண்டில் ஒன்று நாடு எதிர்பார்க்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+