Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 மாநிலங்களை தூக்கும் பாஜக.. உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சி: ஏபிபி - சி வோட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த வருடம் நடக்க உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி தவிர மற்ற மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஏபிபி - சி வோட்டர் சர்வே வெளியிட்டுள்ளது.

இதில் உத்தர பிரதேசம் , கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

ஏபிபி - சி வோட்டர் சர்வேபடி, உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். அதன்படி பாஜக கூட்டணி 212-224 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ளன. இதில் 40.4 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு செல்லும். கடந்த முறை இங்கு பாஜக 325 இடங்களை வென்றது. இங்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 151-163 இடங்களை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 12-24 இடங்களையும், காங்கிரஸ் 2-10 இடங்களையும் பெற வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

உத்தர காண்ட்

உத்தர காண்ட்

உத்தரகாண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜகதான் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. இங்கு 39.8% வாக்குகள் அதாவது 33-39 இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். இங்கு 70 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் 29-35 இடங்களை 35.7 % வாக்குகள் பெற்று பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் ஆம் ஆத்மி 12.6 சதவீத வாக்குகள் பெற்று 1-3 இடங்களை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

கோவா

கோவா

கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. அதன்படி கோவாவில் பாஜக 17-21 இடங்களை பிடிக்கும். அங்கு 40 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் 4-8 இடங்களை பிடிக்கும். ஆம் ஆத்மி 5-9 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆம் ஆத்மி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

 மணிப்பூர்

மணிப்பூர்

மணிப்பூரில் ஏபிபி - சி வோட்டர் சர்வேயின்படி பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக 29 -33 இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் 23-27 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கணிப்புப்படி இங்கு நாகா மக்கள் முன்னேற்ற அமைப்பு 2-6 இடங்களை பிடிக்கும். இங்கு மொத்தம் 60 இடங்கள் உள்ளது குறிப்பித்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+