ABP survey: திமுக கூட்டணி 170+ இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்குமாம்! பரபரக்கும் சர்வே!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ஏபிபி சர்வே கணித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் வகையிலான இடங்களே கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

திமுக 164 இடங்களிலும் அதிமுக 167 இடங்களிலும் தவெக 233 தொகுதிகளிலும் (எடப்பாடி தொகுதி வேட்பாளர் நிராகரிப்பால்) நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுகிறது.
இந்த தேர்தலில் திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது. அதிமுகவோ ஆட்சியை பிடிக்க தீவிரம்காட்டி வருகிறது. இவர்களை தவிர்த்துவிட்டு தவெக, நாம் தமிழர் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என சூளூரைத்து வருகிறார்கள்.
வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மக்களிடம் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்த கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய பெரும்பான்மையாகும். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பலமான கூட்டணிக் கட்டமைப்பு ஆகியவை திமுகவுக்குப் பெரும் பலமாக உள்ளன.
2019 மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ச்சியாக அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் திமுக, தனது செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருப்பதை இந்தக் கணிப்பு காட்டுகிறது.
அதிமுக 50 முதல் 58 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிப்பு கூறுகிறது. கடந்த தேர்தலை விட இது சற்றே குறைந்த எண்ணிக்கையாகக் கருதப்படலாம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க இன்னும் கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இது உணர்த்துகிறது. பலமுனைப் போட்டிகள் நிலவும் சூழலில், அதிமுகவின் வாக்கு வங்கியில் மற்ற கட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே 4 முதல் 6 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் இது சிறியதாகத் தெரிந்தாலும், ஒரு புதிய கட்சி திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில் இடம்பிடிப்பது சாதாரணமானதல்ல.
இந்த 4-6 இடங்கள் என்பது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெக-வுக்கு எந்தளவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று நிலவும் சூழலை மட்டுமே பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் போது இந்த எண்களில் மாறுபாடு இருக்கலாம். இருப்பினும், தற்போதைய நிலையில் திமுக கூட்டணி மிகவும் வலுவான முன்னிலையில் இருப்பதையும், புதிய கட்சிகளின் வருகை தமிழக அரசியலில் ஒரு மெல்லிய மாற்றத்தைத் தொடங்கியிருப்பதையும் ஏபிபி சர்வே சுட்டிக் காட்டுகிறது.
-
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
ஒரே பெயரில் பலர் போட்டி! சென்னையில் விஜய் உள்பட தவெக –அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கல்! லிஸ்ட் இதோ -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
பணிந்தார் கமல்ஹாசன்.. விருப்பமனு கட்டணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் -
21 தொகுதிகளில் உதயசூரியனும் இல்லை.. இரட்டை இலையும் இல்லை.. தட்டி தூக்குகிறார்களா விஜய், சீமான்? -
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
பாஜகவையே "டம்மி" ஆக்கிய எடப்பாடி? 27 இடங்களிலும் திமுகவுக்கு கோல்டன் சான்ஸ்! அப்பாவுக்கு "அப்பாடா" -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
சின்னம்மா வர்றாங்க போகாதீங்க! திமுகவுக்கு "திமிங்கலம்" சிக்குதா? சசிகலாவுக்கு சொந்த கட்சியிலேயே அடி? -
தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது? -
திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க -
"எழுத்து பிழை".. சிதம்பரம் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு.. மாற்று வேட்பாளராகும் தந்தை











Click it and Unblock the Notifications