இவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்
சென்னை: "இவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்லபார்த்தது.. எல்லாம் கற்பனை.. மேடை மேடையா அழுதுட்டு வருகிறார் துரைமுருகன்" என்று ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிமுக வேட்பாளரான ஏசி சண்முகத்தின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இப்படி ஒரு அறிவிப்பு வரும்போது ஏசி சண்முகம் பிரச்சாரத்தில் இருந்தார். விஷயம் கேள்விப்பட்டதும், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு, ஏ.சி.சண்முகம் அதிமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பிரதிநிதிகள் ஒப்படைத்த பிறகே, ஏசி.சண்முகத்தின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட ஏசி சண்முகம் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.
அப்போது பேசிய அவர், "நான் புதிய நீதிக்கட்சி தலைவராக இருந்தாலும் அதிமுக உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டையை வேட்புமனுவில் தந்திருக்கிறேன்.
துரைமுருகன் கூட்டத்தினர் சலசலப்பை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே துரைமுருகன் மேடை, மேடையாக அழுகிறார். இதற்காகவே நாடகம் ஆடுகிறார்.
அவரது மகனை லாரி ஏற்றி கொல்ல சதி செய்யப்பட்டதாக சொல்கிறார். தேர்தலையொட்டியே இப்படி கற்பனையாக பொய் சொல்கிறார். ஏன்னா, இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இதுக்கெல்லாம் தோல்வி பயம்தான் காரணம்" என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications