முன்னணி நடிகர்களின் இயல்பான நடிப்பிற்கு பிள்ளையார்சுழி போட்ட முத்துசாமி!
Recommended Video

சென்னை : இன்று வெள்ளித்திரையில் இயல்பான நடிப்பிற்கு சொந்தக்காரர்கள் என்று பாராட்டப்படும் பலருக்கும் ஆசான் யார் என்று கேட்டால் அது மறைந்த ந. முத்துசாமி என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம், உனக்கென ஒரு பாணியை உருவாக்காமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயல்பாக நடிக்க வேண்டும் என்பதே முத்துசாமி நடிகர்களுக்கு கற்றுக்கொடுத்த பாலபாடம்.
சினிமாவில் நடிக்க வர விரும்பும் பலரும் செல்லும் முதல் இடம் கூத்துப்பட்டறை. கலையையும் கலைஞர்களையும் வளர்ச்சிப் பாததைக்கு அழைத்து செல்வதற்காக ந. முத்துசாமியால் நிறுவப்பட்டது இந்த கூத்துப்பட்டறை. நாடகக்கலை மற்றும் நடிப்பின் மீது தனக்கு இருந்த தீராப் பசிக்கு தீனி போடும் இடமாக கூத்துப்பட்டறையை வழிநடத்தி வந்தார் முத்துசாமி.

கலையில் நவீனங்களை புதுத்துகவதும், நவீனங்களுக்குள் கலையை கொண்டு வந்து இணைப்பதுமே முத்துசாமி செய்த மாயாஜாலம். கலைத்துறைக்கு இவர் செய்யும் தொண்டு அனைவரையும் மலைக்கச் செய்யதோடு, இவர் பட்டறையில் இருந்து வெளிவந்த நடிகர்களின் நடிப்பை பார்த்து மலைத்துப் போயினர்.
50 ஆண்டுகளாக முத்துசாமி நடத்தி வரும் கூத்துப்பட்டறையில் இருந்து வெளிவந்த நடிகர் பட்டாளம் ஏராளம். தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்ளிட்டோர் இவரிடம் பாடம் கற்றவர்களே. கூத்துப்பட்டறையில் அக்கவுண்டன்டாக பணியாற்றிய விஜய்சேதுபதி பணியை பார்த்துக் கொண்டே கூத்துப்பட்டறையில் நடிப்பை கற்றதாக பல மேடைகளில் பெருமையுடன் சொல்லி இருக்கிறார். மக்கள் தலைவன் என்று வெள்ளித்திரையில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு படத்திற்கு படம் கதாபாத்திரத்தில் வித்தியாசத்தை காட்டி இயல்பாக நடிக்கும் பசுபதி உள்ளிட்டோரும் இவரின் வடிவமைப்பில் உருவானவர்களே.
நவீன நாடகக் கலையின் முன்னோடியாக விளங்கிய முத்துசாமிஇ கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார். கலைத்துறைக்கு சிறந்த சேவையாற்றி விட்டு பலரையும் உயரத்திற்கு ஏற்றிவிட்ட ந. முத்துசாமி என்னும் இந்த ஏணியை நினைக்காதவர்களே இருக்கமாட்டார்கள். திரைத்துறைக்கு பல நல்ல நடிகர்களை, கலைஞர்களைத் தந்த முத்துசாமி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று திரைத்துறையினர், நாடகத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications