டபுள் மீனிங்.. ஆபாசம்.. அசிங்கம்.. அப்பவே ஆக்ஷன் எடுத்திருந்தால்.. ராஜகோபாலன்கள் அடங்கியிருப்பார்களே
பத்ம சேஷாத்ரி பள்ளி மீதும் நடவடிக்கை கோருகிறார்கள்
சென்னை: பாத்ரூமில் இருந்து நேராக வந்து மாணவிகள் முன் நிற்பது, அரை நிர்வாண கோலத்துடனேயே காட்சியளிப்பது, ஆபாச வீடியோக்களை ஷேர் செய்வது என பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலேயே ஆசிரியர் ராஜகோபாலன் செயல்பட்டு வந்துள்ளார்... அன்று, ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் இறந்த விவகாரத்தின் போதே போலீஸ் நடவடிக்கை கடுமையாக இருந்திருந்தால், இந்நேரம் இந்த ராஜகோபாலன் போன்றோர் தலைதூக்கியிருக்கவே மாட்டார்கள்..என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
Recommended Video
சென்னையில் மிகப்பிரபலமான பள்ளி பத்ம சேஷாத்திரி.. இங்கு சீட் கிடைப்பதே குதிரை கொம்பு.. அவ்வளவு டிமாண்ட்.. இந்த பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் திறமைசாலிகளாக வளருவார்கள் என்ற நம்பிக்கை பல பெற்றோர்களிடம் பதிந்து போய் உள்ளது.
அதனாலேயே அட்மிஷன் நேரங்களில் இந்த பள்ளியில் கூட்டம் முண்டியடிக்கும். நடிகர்கள், தொழிலதிபர்கள் பிள்ளைகள் முதல் மேல்தட்டு வர்க்கத்தினர் பெரும்பான்மையோர் படிக்கும் பள்ளியாக இது உருவெடுத்தது. ஆனால், அதற்கேற்றபடி பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியானது 2012-ல் நடந்த சம்பவத்தினால்தான்..!

நீச்சல் குளம்
ஜெயலலிதா ஆட்சியின் போது கடந்த 2012, ஆகஸ்ட் மாதம், இதே பள்ளியில் நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, பிரபல டைரக்டரின் ஒரே மகன் ரஞ்சன் என்ற 4ம் வகுப்பு படித்து வந்த மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான்.. ஆனால் அப்போது அந்த விவகாரம் சீக்கிரமே அடக்கப்பட்டு விட்டது. பள்ளி முதல்வர் ஒப்புக்கு கைது செய்யப்பட்டார்.

சம்பவம்
இந்த ஆசிரியர் ராஜகோபாலன் விஷயத்திலும் அப்படித்தான் நடந்து வருகிறது.. இந்த ஆசிரியர் மட்டும் கைதாகி உள்ளார்.. சம்பவம் நடந்தது பள்ளியில்... பாதிக்கப்பட்ட பெண்களும் பள்ளி மாணவிகளே.. குற்றத்துக்கு ஆளானவரும் இதே பள்ளியை சேர்ந்த ஆசிரியரே.. அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.. அப்படியென்றால், இந்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகம் எதற்குமே பொறுப்பாகாதா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஜெயில் தண்டனை
ஆனால், இதை தனிப்பட்ட நபர் செய்த விஷயமாகவே ஆரம்பத்தில் இருந்து பார்க்கப்பட்டு வருவதும் பள்ளியின் மீதான நம்பகத்தன்மையை குறைத்து காட்டி வருகிறது. இந்த ஆசிரியர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்..!

ஒத்துழைப்பு
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், உரிய நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் விசாரணைக்கு சென்றுள்ளார்.. ஆனால் பள்ளி நிர்வாகம் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லையாம்.. இதையடுத்து அந்த பள்ளிக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்புவதும், அதை எதிர்கொள்வதும் என்பது சட்ட ரீதியான பிரச்சனை.. இது நீண்டு கொண்டே போகுமே தவிர, உடனடி தீர்வுக்கு இது உதவாது.

வழக்கு பதிவு
சேலையூரில் பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி ஸ்ருதி இறந்தாளே, அந்த பள்ளி நிர்வாகிகள் மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. தாளாளர் கைது செய்யப்பட்டார். ஒரு டிரைவரின் கவனக்குறைவுக்கே தாளாளர் கைது என்றால், பள்ளிக்குள் ஒரு ஆசிரியர் செய்த தவறுக்கு என்ன மாதிரியான நடவடிக்கை தேவை என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அன்று, நீச்சல் குளத்தில் ரஞ்சன் இறந்தபோதே பள்ளி நிர்வாகத்தினர் கவனக்குறைவாக இருந்துள்ளனர்... அவர்கள் மாணவர்கள் பாதுகாப்புக்காக எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதே அன்றைய குற்றச்சாட்டாக இருந்தது.

நடவடிக்கை
ரஞ்சன் விஷயத்தில் கோட்டை விட்டதுதான், இன்று பிஞ்சு குழந்தைகள் பாதிப்பு வரை வளர காரணமாக இருந்துள்ளது.. அன்றே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், ராஜகோபாலன் போன்றோர் திருந்தியிருக்க அல்லது தங்களது கொழுப்பை அடக்கியிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதேபோல, குடும்ப மரியாதை, கண்ணியம், கவுரம் என்று பல மாணவிகள் நினைத்தாலும், பெற்றோர்கள் அப்படி விட்டுவிடக்கூடாது.. நைட் நேரத்தில் போன் செய்து, மாணவிகளின் டிரஸ் குறித்தும், உடல் ரீதியான ஆபாச பதிவுகள் செய்து வந்துள்ள இந்த ஆசிரியரை பற்றி தானாகவே முன்வந்து புகார்களை சொல்ல முன்வர வேண்டும்..

திமுக
அதுமட்டுமல்லாமல், இந்த ஆசிரியரிடம் படித்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.. ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினின் திமுக அரசு, தனியார் பள்ளி நிர்வாகிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க செய்யாமல், கடுமையான தண்டனையையும், சீர்திருத்த நடவடிக்கைகளையும் இனியாவது எடுக்க வேண்டும் என்பதே மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும். அப்போதுதான் அத்தனை குற்றவாளிகளும் திருந்த ஒரு வாய்ப்பு உருவாகும்.

நழுவுவதா?
அதேபோல தங்களது பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியது பள்ளி நிர்வாகிகளான தாளாளர், டிரஸ்டிகள், முதல்வர் உள்ளிட்டோரின் முக்கியக் கடமை. அதிலிருந்து அவர்கள் தவறினால் அதற்கான தண்டனையையும் அவர்கள் அனுபவித்துதான் தீர வேண்டும். இது தொடர்பாக மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் அவ்வப்போது குறை கேட்க வேண்டும். பயப்படாமல் அனைவரும் குறைகளைக் கூறுமாறு ஊக்குவிக்க வேண்டும்.. அதுதான் நல்ல நிர்வாகத்திற்கு அழகு. அதை விட்டு விட்டு எங்க தப்பு கிடையாது என்று கூறி நழுவப் பார்ப்பது அழகல்ல என்பதை அனைத்து பள்ளி நிர்வாகங்களும் உணர வேண்டும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications