சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெருமுனையில் ஆட்டோ பிடித்து வந்த உதயநிதி.. பின்னாடியே வந்த அமைச்சர்கள்.. ஆக்‌ஷன் கோரும் எல்.முருகன்

ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை தேவை என்கிறார் எல்.முருகன்

Google Oneindia Tamil News

சென்னை: அதெப்படி உதயநிதி ஸ்டாலின் ஆட்டோவில் வரலாம்? ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள், எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

    திடீரென Auto-வில் போன DMK தலைவர்கள்.. என்ன நடந்தது?

    தினம் தினம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி மக்களை பேச வைத்து வருகிறார் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில், தொகுதி மக்களை சந்திக்க நேற்று ஆட்டோவில் வந்து இறங்கியதுதான் இப்போதுவரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...

    இதுதான் அந்த தொகுதி மக்களையும் நெகிழ வைத்து விட்டது.. வழக்கமாக தொகுதிக்குள் ஆய்வு செய்யவும், மக்களை சந்திக்கவும் சொகுசு காரில்தான் வந்திறங்குவார் உதயநிதி.. ஆனால், தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் பகுதியானது, கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும்..

    உதயநிதி

    உதயநிதி

    கார் போன்ற வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.. மேலும் இந்த பகுதியில் பல இடங்களில் கார் உட்பட பல வாகனங்கள் போக முடியாத அளவுக்கு சந்துகள் நிறைய உள்ளன.. இந்த சிரமத்தினால்தான், காரை தவிர்த்துவிட்டு, தன் வீட்டு தெரு முனையில் இருந்து ஒரு ஆட்டோக்கார அண்ணாவை வரவழைத்து அந்த ஆட்டோவில் ஏறி கிளம்பினார்..

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    இவர் மட்டுமல்ல, இவருடன் வழக்கமான வரும் அதிகாரிகளையும் ஆட்டோ பிடித்து கொண்டே தொகுதிக்கு வந்துவிடுமாறும் போனை போட்டு சொல்லி உள்ளார்.. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் உட்பட எல்லாரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.. இதை பார்த்ததுமே அந்த தொகுதி மக்கள் வாயடைத்து போனார்கள்.. இப்படி ஒரு எளிய எம்எல்ஏவா? என்று ஆச்சரியப்பட்டு போனார்கள்..

    கேள்வி

    கேள்வி

    அதேசமயம் எதிர்க்கட்சிகள் இதை கிண்ட ஆரம்பித்துள்ளன.. ஊரடங்கு அமலில் உள்ளபோது அதெப்படி உதயநிதி ஸ்டாலின் இப்படி போகலாம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இதையேதான் கூறினார்.. அவர் பேசும்போது சொன்னதாவது:

    நடவடிக்கை

    நடவடிக்கை

    "உதயநிதி தேவைக்காகவே இப்படி ஆட்டோவில் போனதாக வைத்து கொண்டாலும், இவருக்கும்தான் சட்டம் பொருந்தும்.. சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் அனைவரும்தான்.. சட்டத்தை கடைப்பிடித்துதான் ஆட்டோவில் வந்தால் சரி.. இல்லாவிட்டால், ஊரடங்கில் விதிகளை மீறிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலினின் பிரசாரத்தை தாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என்று கருத்து சொன்னவர் எல்.முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Action should be taken against Udhayanidhi Stalin who violated Rules, says L Murugan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X