தமிழ்நாட்டில் இன்று 1559 பேருக்கு கொரோனா.. 26 பேர் பலி.. சென்னையில் ஒருவரும் பலியாகவில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1559 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இன்று சென்னையில் ஒருவரும் பலியாகவில்லை.

கடந்த இரண்டு மாதமாக தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்கிறது. முக்கியமாக தினசரி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், புதிதாக பதிவாகும் கேஸ்களில் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. இதனால் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

அதோடு தமிழ்நாட்டில் தினசரி பதிவாகும் பலி எண்ணிக்கையும் 30க்கும் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக தமிழ்நாட்டில் 1600க்கும் குறைவான கேஸ்களே பதிவாகி வருகிறது.

கேஸ்கள்

கேஸ்கள்

தமிழ்நாட்டில் புதிய கொரோனா கேஸ்கள் மேலும் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1559 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 26 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 34,814 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

குணம்

குணம்

அதேபோல் தமிழ்நாட்டில் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் 1800க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 1,816 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,54,323 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

மற்ற மாவட்டங்கள்

மற்ற மாவட்டங்கள்

கொரோனா அதிகம் பதிவாகி வந்த சென்னை, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கேஸ்கள் குறைந்துள்ளன. ஈரோட்டில் 115 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1557 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 216 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2118 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.சென்னையில் இன்று 175 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 1975பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

சென்னை

சென்னை

கொரோனா காரணமாக இன்று சென்னையில் ஒருவரும் பலியாகவில்லை. அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை. நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, தென்காசி, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒருவரும் கொரோனா காரணமாக பலியாகவில்லை.

ஆக்டிவ்

ஆக்டிவ்

தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,069 ஆக சரிந்து உள்ளது.தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,07,206 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று 1,60,911 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று 1,60,306 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 4,06,38,494 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+