Ajithkumar: அஜித்குமார் வாங்கிய புதிய கார்! எத்தனை கோடி தெரியுமா? சிறப்பம்சங்கள் என்ன?
சென்னை: கார் பந்தயங்களில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், புதியதாக ஃபோர்டு எப் 150 ஜீரோ டிரக் மாடல் காரை வாங்கியுள்ளார். கார் பந்தயங்களில் மட்டுமில்லாமல் பைக் சாகசங்களிலும் வல்லவரான அஜித்திடம், உலகின் சிறந்த பிராண்ட் கார்கள் பத்துக்கும் மேற்பட்டவை உள்ளன.
நடிகர் அஜித் சினிமா துறையில் மட்டுமில்லாமல் கார் பந்தயங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அதுபோல் பைக் சாகசங்களை செய்வதில் வல்லவர். இவர் உலகின் சிறந்த பிராண்ட் கார்களை வாங்குவதை அதிகம் விரும்புவார். அது போல் அவரிடம் உலக பிரபலமான கார்கள் 10-க்கும் மேற்பட்டவை உள்ளன.

அவர் வைத்திருக்கும் கார்களின் பட்டியல்:
லம்போர்கினி ஜிடி
மெக்லார்ன்சென்னா
ஃபெராரி எஸ்.எப் 90
போர்ஷே ஜி.டி.3. ஆர்.எஸ்
பிஎம்டபிள்யூ 740 எல்.ஐ
மெர்சிடிஸ் பென்ஸ் 350 ஜி.எல்.எஸ்
ஃபெராரி 458 இத்தாலியா
ஹோண்டா அக்கார்டு வி6
இவை அனைத்தும் அதிநவீன சொகுசு கார்கள். இந்தக் கார்கள் அனைத்தும் வேகமாக செல்லக்கூடியவை. இத்தனை கார்களை வைத்திருக்கும் அஜித்திடம் ஃபோர்டு கார் மட்டும் இல்லாமல் இருந்தது. இந்த குறையை போக்க, தற்போது ஃபோர்டு எப் 150 ஜீரோ டிரக் மாடல் காரை அவர் வாங்கியுள்ளார்.
இந்த காரின் சிறப்பம்சங்கள்:
3500 சிசி என்ஜின்
30 பி.எச்.பி பவரை உற்பத்தி செய்யக்கூடிய வசதி
87 லிட்டர் எரிபொருள் டேங்க்
10 கியர்கள்
அஜித் வாங்கியுள்ள இந்த காரின் விலை சுமார் ரூ. 1.10 கோடி என கூறப்படுகிறது.
கார் பந்தயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அஜித், சமீபத்தில் துபாயில் நடந்த 24 எச் கார் ரேஸில் கலந்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய அவரது அணி மூன்றாவது பரிசை பெற்றது. பைக், கார் பந்தயங்களுக்காக அவர் பயிற்சியில் ஈடுபடும்போது பலமுறை விபத்து ஏற்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அது போல் இத்தாலியில் நடந்த கார் ரேஸிங்கிலும் கலந்து கொண்டார். அவ்வப்போது அவர் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறார். கார் பந்தயங்கள் முடியும் வரை சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் எதையும் அஜித் செய்யவில்லை. இந்த மாத இறுதியில் அனைத்து கார் பந்தயங்களும் முடிகிறது என தெரிகிறது. இதன் பிறகு அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வார் என சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications