கஜா புயல் நிவாரணத்திற்கு.. நடிகர் அஜீத் ரூ. 15 லட்சம் நிதி!
நடிகர் அஜீத் ரூ.15 லட்சம் நிவாரண நிதியாக அளித்தார்
சென்னை: கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜீத் 15 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
ஒரு சுழட்டு சுழட்டி விட்டு போன கஜாவால் இன்னும் தமிழகம் மீளவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் வீடு, வாசல், தோப்பு, நிலபுலன்கள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறார்கள்.
ஒரு பக்கம் மீட்பு பணிகள் தொடர்கின்றன, மற்றொரு பக்கம் நிவாரண உதவிகள் சேர்கின்றன. எனினும் பாதிப்படைந்த மக்கள் மீண்டு வர காலம் பிடிக்குட் என்று சொல்கிறார்கள்.

முதல்வர் வேண்டுகோள்
புயல் பாதிப்பு குறித்து டெல்லி சென்று பிரதமரிடம் விளக்கி விட்டு, நிதியுதவி கோரினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆன்லைன் உதவி
இதையடுத்து, பொதுமக்கள் கஜா புயல் பாதிப்புக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதவி நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்த உதவியை மக்கள், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கொடுத்து வருகிறார்கள்.

நடிகர்கள் உதவி
அதேபோல தொழிலதிபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். திரைத்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, கஸ்தூரி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் நிவாரண பொருட்களையும் நிதியுதவியையும் அறிவித்துள்ளனர்.

அஜித் வழங்கினார்
இந்த நிலையில், நடிகர் அஜீத் 15 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு வழங்கினார். இதுவரை முதலமைச்சரின் கஜா புயல் நிவாரண நிதியில் ரூ. 13.32 கோடி வரை சேர்ந்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications