மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது.. அஜித் குமார் பேச்சு
சென்னை: மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது' என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை.. பயணம் மேற்கொள்ளும் போது தான் பலவித அனுபவங்கள் கிடைக்கும். பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும் என்று நடிகர் அஜித் குமார் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தனது வீனஸ் நிறுவனத்திற்காக ஏப்ரல் மாதம் பேசிய வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
பலருக்கு பயணம் என்பது மிகவும் படித்த ஒன்று. வாழ்க்கையே பயணம் தான் என்றாலும், பிடித்த இடங்கள், இதுவரை சந்திக்காத மனிதர்கள், வித்தியாசமான கலாச்சாரங்கள் என பல விஷயங்களை பயணத்தின் மூலம் பார்க்க முடியும். 2கே கிட்ஸ் பலர், மதுரையில் இருந்து திருச்சிக்கோ,திருச்சியில் இருந்து கோவைக்கோ இருசக்கர வாகனத்தில் செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது,

உட்கார்ந்த இடத்திலேயே வேலை எப்போது ஆரம்பித்ததோ, அப்போதே பலருக்கும் மன அழுத்தமும் அதிகமானது. அதனை குறைக்க பயணத்தின் மீது பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைக்கு பலர் லடாக்கிற்கு சர்வ சாதாரணமாக சென்று வருகிறார்கள். சென்னை டூ கொல்கத்தா, சென்னை டூ கோவா, திருவனந்தபுரம் டூ மும்பை, காஷ்மீர் டூ கன்னியாகுமரி, மேகலாயா, சிக்கிம் என பிடித்த இடங்களுக்கு எல்லாம் இரு சக்கர வாகனத்திலேயே பலரும் சுற்றுலா செல்ல தொடங்கிவிட்டார்கள். இதேபோல் காரிலும் சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது.
பொதுவாக இரு சக்கர வாகனத்தில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் நடிகர் அஜித் குமார். இப்படி சுற்றுலா செல்பவர்களுக்காக புதிய நிறுவனம் தொடங்கலாமே என்று யோசித்தவர் அதற்கான அறிவிப்பினை கடந்த ஆண்டு வெளியிட்டார். தொலைதூரங்கள் இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா சென்று வருவோருக்கு பாதுகாப்பான பயணம் மற்றும் அறியப்படாத இடங்களை காட்டுவது போன்ற சேவைகளை செய்ய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' என்ற பெயரில் அஜித்தின் சுற்றுலா நிறுவனம் இயங்கி வருகிறது. பைக் மட்டுமல்ல காரிலும் சுற்றுலா செல்ல வீனஸ் சுற்றுலா நிறுவனத்தை அணுகலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. நாடு முழுவதும் சூப்பர் பைக்கில் மற்றும் கார்களில் நாட்டின் முக்கியமான சுற்றுலா தளங்களை பார்வையிட இனி அஜித் குமாரின் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' நிறுவனத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது,
HQ video with subtitle #AK #AjithKumar
— Prakash Mahadevan (@PrakashMahadev) October 5, 2024
pic.twitter.com/y7p4b9tIGk
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அறியப்படாத இடங்கள் இருக்கின்றன.அவற்றை பார்க்க விரும்புபவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை அஜித்தின் வீனஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுக்கிறதாம். இந்நிலையில் நடிகர் அஜித் குமார் வீனஸ் டூர்ஸ் நிறுவனத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் கூறுகையில், "மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது' என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை.. மக்களை பார்க்காமலேயேக் கூட அவர்களை நாம் இப்படித்தான் என மதிப்பிட கூடும். ஆனால், நீங்கள் பயணிக்கும்போது பலதை அனுபவிக்கலாம். நான் பயணித்தின்போது, பல நாட்டைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்திருக்கிறேன். அதனால், நீங்கள் மக்களைப் புரிந்து கொள்ள முடியும். பயணத்தினால், உங்களைச் சுற்றியுள்ள மக்களை புரிந்து கொள்ள தொடங்குவீரகள். அது உங்களை மேம்பட்ட மனிதராக்கும்" இவ்வாறு பேசியுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications