ட்ரிப்பிற்கு கிளம்பிய நடிகர் அஜித்! பைக் நம்பரை சோதித்து பார்த்தால் அதிர்ச்சி! இன்சூரன்ஸ் இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் குமார் இன்சூரன்ஸ் இல்லாத பைக்கை ஓட்டி வருவதாக இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகர் அஜித் தற்போது ஏ.கே 61 படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் எச். வினோத்துடன் நடிகர் அஜித் இணைந்துள்ளார்.

வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் படத்தின் பைக் ரேஸ் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அஜித்

அஜித்

படப்பிடிப்பிற்கு இடையில் அஜித் அவ்வப்போது பைக் ரைடுகளை மேற்கொண்டு வருகிறார். படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விரைவில் எடுக்கப்பட உள்ளது. இந்த வருடம் டிசம்பரில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு படம் வெளியாகும் என்று கூறுகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் அஜித் தற்போது லடாக், லேவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

லடாக்

லடாக்

தனது நண்பர்கள் குழுவுடன் அவர் லடாக், லேவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. BMW R 1200 வகை பைக்கில் இவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இவரின் பைக்கில் never ever give up என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் காரணமாக அஜித் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பைக்

பைக்

அதன்படி இவர் TN07CU2577 என்ற எண் கொண்ட பைக்கை ஓட்டி வருகிறார். இது சென்னை தெற்கில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது. 2019-11-22 அன்று இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. AJITH KUMAR என்ற பெயரில் இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டோ சர்ச்சையாக காரணம், பைக்கின் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது என்பதுதான். ஆம் இந்த பைக்கின் இன்சூரன்ஸ் 2020-11-12 அன்று முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.அதன்படி இவர் TN07CU2577 என்ற எண் கொண்ட பைக்கை ஓட்டி வருகிறார். இது சென்னை தெற்கில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது. 2019-11-22 அன்று இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. AJITH KUMAR என்ற பெயரில் இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டோ சர்ச்சையாக காரணம், பைக்கின் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது என்பதுதான். ஆம் இந்த பைக்கின் இன்சூரன்ஸ் 2020-11-12 என்று முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சர்ச்சை

சர்ச்சை

இதுதான் சர்ச்சையாகி உள்ளது. ICICI LOMBARD என்ற வங்கியில் இவர் இன்சூரன்ஸ் செய்துள்ளார். ஆனால் கடந்த 2 வருடம் முன்பே அதன் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது. முதல் இன்சூரன்ஸ் முடிந்த பின் அவர் இன்சூரன்ஸை மீண்டும் புதுப்பிக்கவில்லை என்று ஆவண தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+