நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை.. மூளையில் இருந்த கட்டி அகற்றம்! அப்போலோவில் தொடர் சிகிச்சை
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டுள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இவர் படப்பிடிப்புகளுக்கு நடுவே வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் மூளையில் லேசான கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அஜித் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு கட்டியானது அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications