நடுவழியில் பிரச்னை.. குழம்பி நின்ற இளைஞன்! மெக்கானிக்காக மாறி உதவிய நடிகர் அஜித்.. நெகிழ்ச்சி பதிவு
சென்னை: நடிகர் அஜித் வட மாநிலங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பான பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார்- ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
தற்காலிகமாக ஏ.கே.61 என்று என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பைக் பயணம்
படத்தின் ஷூட்டிங் இடையே அவ்வப்போது அஜித் பிரெக் எடுத்து வருகிறார். அதற்கேற்ப தான் ஷூட்டிங்கும் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான், அவர் ஐரோப்பா நாடுகளில் பைக் பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்தச் சமயம் எடுக்கப்பட்ட ஃபோட்டோகள் இணையத்தில் டிரெண்டானது. ஹெச். வினோத் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது.

பிரேக்
இதனிடையே சின்ன பிரேக் எடுத்துள்ள அஜித், வட மாநிலங்களுக்கு பைக் பயணம் சென்றுள்ளார். மணாலி உள்ளிட்ட இடங்களில் அஜித் இருக்கும் படங்கள் இணையத்தில் சில வாரங்களுக்கு முன்பு பரவியது. பிரபல நடிகை மஞ்சு வாரியரும் அஜித் உடன் இணைந்து பைக் பயணம் சென்று இருந்தார். நடிகர் அஜித்குமார் BMW R 1200 பைக்கில் பயணித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம்
இந்நிலையில், வட மாநிலங்களில் பைக் பயணம் சென்ற இளைஞர் ஒருவர் அஜித்குமார் தனக்கு எப்படி உதவினார் என்பது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஃபோட்டோக்களை பகிர்ந்து உள்ளார். தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில், "நான் உங்களுக்கு ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் என்பார்கள் அப்படி ஒரு சம்பவம் தான் எனக்கு நடந்தது.

டயர் பஞ்சர்
எனது பைக் பயணத்தில் முதல்முறையாக டயர் பஞ்சர் ஆகிவிட்டது. நான் அங்கு உதவி தேடினேன். அப்போது எனது கனவு பைக்கான ஒரு bmw 1250GSA என்னைக் கடந்து சென்றது. நான் அவரை நோக்கி கையை அசைத்தேன். நான் அவரிடம் ஏர் கம்ப்ரஸரைக் கேட்டேன். அது பின்னால் இருக்கும் பைக்கில் இருப்பதாக அவர் கூறினார். 10 நிமிடங்கள் பின்னால் வந்த காரில் அது இருந்தது.

அஜித்
அப்போது அவரிடம் நான் பேச்சு கொடுத்தேன். எனது பெயர் மற்றும் வேலையைச் சொல்லி அறிமுகம் ஆகிக் கொண்டேன். அவரிடம் பெயர் கேட்ட போது, அவர் நான் அஜித் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினேன். அதன் பின்னர் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரே எனது பைக்கை சரி செய்தார். அடுத்த இரண்டு மணி நேரம் அவருடன் பயணித்தேன்.

டீ குடித்தோம்
பின்னர் தயங்கித் தயங்கி டீ உங்களுடன் ஒரு டீ குடிக்கலாமா? அது எனக்கு ஒரு பாக்கியம் என்றேன். அடுத்த டீக்கடையில் டீ குடித்தோம். அப்போது 10 நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி உரையாடியவர். நாங்கள் பயணிக்கும் ரூட்டை கேட்ட அவர் எங்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு விடை பெற்றார்.

காரணம்
நான் இந்த சம்பவத்தைப் பதிவிட இரண்டே காரணங்கள் தான்
1. மிகப் பெரிய மனிதர் ஒருவர் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் எளிமையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்... அவனுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது அந்த அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறான்.
2. எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது, இந்த நாளை என்னால் மறக்க முடியாது, அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்" என்று பதிவிட்டுள்ளோர்.

அதிர்ஷ்டசாலி
இந்த ரசிகரது இந்த பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அவர் அஜித்துடன் எடுத்து புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்து உள்ளார். அஜித்தின் ரசிகர்கள் பலரும் இன்ஸாடாகிராமில் படத்தைப் பகிர்ந்த அந்த இளைஞரை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications