விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்.. ஈஞ்சம்பாக்கம் வீட்டின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள்
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டு சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித் குமார். அஜித், ஏகே என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டுதான் தன்னை தல என அழைக்க வேண்டாம் என சுற்றறிக்கையை ரசிகர்களுக்கு அனுப்பினார்.

தன்னை ஏகே, அஜித், அஜித்குமார் என்றே அழைக்க அவர் கேட்டுக் கொண்டார். இவர் திருவான்மியூர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேறு ஒரு வீட்டுக்கு குடிப்பெயர்ந்தார்.
இந்த வீட்டில் நவீன காலத்திற்கு ஏற்ப பல வகையான மாற்றங்களை செய்துள்ளார். இந்த வீடு அஜித் பார்த்து பார்த்து செதுக்கியது என்றும் கூறலாம். தனது தந்தையும் இந்த வீட்டில் வசித்துள்ளார். தந்தை இறப்பிற்கு பிறகு அஜித்தின் தாயும் தற்போது அவருடன் வசித்து வருகிறார். அண்மையில் உலக சுற்றுலா சென்றிருந்தார் அஜித்.
அவற்றை எல்லாம் முடித்துக் கொண்டு தற்போது விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜானில் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அஜித் வீட்டருகே சாலை விரிவாக்கப் பணிகளும் மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் இருக்கும் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அஜித்தின் வீட்டுச் சுவரும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கேட் உள்பட மதில் சுவரும் இடிக்கப்பட்டுள்ளது. வீட்டருகே வெளியே பெரிய அளவில் பள்ளமும் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வர பெரிய தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வீட்டு பணிகள் காரணமாக அஜித் வீட்டினர் நேரடியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஈஞ்சம்பாக்கம் வீடு வெளிநாட்டு தரத்தில் ரிமோட் மூலம் இயக்குவது போல் ஹோம் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது. மகன், மகள் விளையாட தனி அறை, நடனம் கற்றுக் கொள்ள தனி அறை என மாற்றியமைத்துள்ளார்.
-
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications