பிரபல ஹீரோயினை காதலித்த வில்லன் நடிகர் ஆனந்தராஜ்! சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கலையாமே!
சென்னை: வில்லன் நடிகர் ஆனந்த ராஜ் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு ஹீரோயினை காதலித்தாராமே! ஆஹா வில்லனுக்குள் ஒரு நாயகனா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆனந்தராஜின் பழைய பேட்டி ஒண்ணு பார்த்துட்டிருந்தேன். அவர் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் காலங்களில் தரமணி பாகத்தில், மத்யகைலாஷ் பாகத்துக்கப்புறம் சாலையில் மஞ்சள் பூக்கள் கொட்டிக்கிடக்க தினமும் தன் திரைப்படக் கல்லூரிக்கு நடந்து போவாராம்.

அப்போது அவரது திரைப்படக்கல்லூரிக்கு அடுத்து ஒரு கேட்டரிங் கல்லூரி. அதில் ஒரு அழகான சைனா பட்லர் பெண் படித்துக்கொண்டிருந்தார். அவரும் அங்கிருந்து நடந்தே கல்லூரிக்கு செல்லும் போது பின்னாலேயே அவரை சைட் அடித்துக்கொண்டே செல்வாராம் ஆனந்தராஜ். மனதில் கனவுகளோடு வாழும் வாலிபப்பருவம். ஒரு நாள் திரைப்படக்கல்லூரிக்கு நடிகர்களை தேர்ந்தெடுக்க இயக்குனர் ஸ்ரீதர் வருவதாக சொல்ல ஆனந்தராஜ் ஆவலுடன் காத்திருக்கிறார்.
ஸ்ரீதர் எல்லோரையும் உற்றுப்பார்த்து விட்டு ஆனந்தராஜுக்கு பக்கத்தில் இருந்த சிவராஜ் குமாரிடம் "நீங்க ராஜ்குமார் பையனா?" ன்னு கேட்டுட்டு யாரையும் தேர்ந்தெடுக்காமல் அடுத்துள்ள கேட்டரிங் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் ஒரு சைனா பட்லரை செலக்ட் செய்துவிட்டு போய் திரையில் அறிமுகப்படுத்துகிறார்.
அவர் தான் தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீ. ஜெயஸ்ரீ, பிரபல நடிகை ஜெயலட்சுமியின் பேத்தி. வீணை எஸ்.பாலச்சந்தர் ஜெயஸ்ரீக்கு தாத்தா. பிற்காலத்தில் ஆனந்தராஜ் உள்ளே நுழையும் போது ஜெயஸ்ரீ வாய்ப்பில்லாமல் வெளியேறுகிறார். தான் வாலிபத்தில் பார்த்த பெண் நடிகையாகி அவரோடு நடிக்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் ஜெயஸ்ரீ இல்லைன்னாலும் அவரோட கஸினோடு நடித்து ஆனந்தராஜ் திருப்தி அடைந்திருப்பார். கஸின் பெயர் சுகன்யா. ஒரு வில்லனுக்குள்ளே இருந்த நாயகனை அந்தப் பேட்டியில் பார்க்க முடிந்தது... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ் மத்தியில் வில்லனாக மிரட்டிய ஆனந்த்ராஜ். தற்போது 2 கே கிட்ஸ்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்து வருகிறார். நானும் ரவுடிதான், மரகத நாணயம் , தில்லுக்கு துட்டு, ஜாக்பாட், கான்ஜுரிங் கண்ணப்பன் ஆகிய படங்களில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பியிருப்பார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் புதுவையில் பிறந்தவர். புலன் விசாரணை, மாநகர காவல் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் இவருடன் எம்ஜிார் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications