எதிர்நீச்சல் சீரியலின் புதிய குணசேகரன்! வேல ராமமூர்த்தி ஓ.பன்னீர்செல்வம் நண்பர் என்பது தெரியுமா?
சென்னை: சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நெடுந்தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேல ராமமூர்த்தி இதுவரை 8 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
அரியநாச்சி, குருதிஆட்டம், குற்றப்பரம்பரை, பட்டத்துயானை, வேலராமமூர்த்தி கதைகள் 1, வேல ராமமூர்த்தி கதைகள் 2, உட்பட 8 புத்தகங்களை எழுதியுள்ள வேல ராமமூர்த்தி, அனுபவம் வாய்ந்த விவசாயியும் கூட என்பது நம்மில் பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்த வேல ராமமுர்த்தி பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தோட்டத்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு கவனித்துக்கொண்டு ஊர் உண்டு விவசாயம் உண்டு என்றிருந்த இவர் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இணைகிறார். அங்கிருந்து திரும்பிய பிறகு சொந்த ஊரான பெருநாழியிலிருந்து மதுரைக்கு குடிபெயர்கிறார். சிறிய வயதில் கிராமத்தில் மண்ணுடன் மல்லுக்கட்டி விவசாயம் பார்த்தே பழக்கப்பட்ட வேல ராமமூர்த்திக்கு மதுரையில் சும்மா இருக்க முடியவில்லை.
தனது வீட்டைச் சுற்றி தென்னை, வாழை, நெல்லி, பப்பாளி, துளசி, வேப்பமரம் என கன்றுகள் வாங்கி நட்டு வைத்து வளர்த்து முறையாக பராமரித்து வீட்டை பசுமைச் சோலையாக மாற்றி வைத்திருக்கிறார் வேல ராமமூர்த்தி. இவர் சென்னைக்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் கூட இவரது குடும்பம் மதுரையில் தான் வசிக்கிறது. படப்பிடிப்பு முடிந்த கையோடு மதுரை திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி.
வேல ராமமூர்த்தியின் யதார்த்தமான மண்மனம் மாறாத பேச்சு தான் மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்ய காரணமாகும். தனது வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து தான் பட்டத்து யானை உட்பட தனது பெரும்பாலன நூல்களை எழுதியிருகிறார் வேல ராமமூர்த்தி.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகுந்த நெருக்கமானவராக அறியப்படும் வேல ராமமூர்த்தி இடையே அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தார். அண்மையில் கூட ஓ.பன்னீர்செல்வம் அம்மா மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தார். வேல ராமமூர்த்தியை பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தகவல் என்னவென்றால் இவர் ஒரு மிகப்பெரிய சாப்பாட்டு பிரியர். எதையுமே வஞ்சகம் இல்லாமல் வகுந்துக் கட்டக் கூடியவர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications