தலையில் தொப்பி, கைலியுடன் விஜய்! தவெக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி! கட்சி அடையாளமே இல்லையே!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தலையில் தொப்பி கைலி அணிந்து விஜய் வந்திருக்கிறார் விஜய். கட்சி அடையாளம் சிறிதும் இன்றி இந்த நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கிறார் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய நிலையில் முதல் ஆண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைத்திருக்கிறது.

கட்சியின் மாநாட்டை தவிர பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் அரசியலில் விஜய் ஏற்படுத்தவில்லை. பரந்தூருக்குச் சென்றது மட்டுமே அவரது கட்சி செயல்பாடுகளில் முக்கியமானது. மற்றபடி மாணவர்கள் சந்திப்பு, புத்தக வெளியீட்டு விழா, ட்விட்டர் அரசியல் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிந்தும் அதனையே செய்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அதில் விஜய் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம் தான்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் தொடங்கி இரண்டாம் ஆண்டு தொடங்கி இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக ரமலான் மாதத்தை முன்னிட்டு அக்கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காட்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது தொடர்ந்து. ஒய்சிஎம்சிஏ
மைதானத்தில் ஏராளமான நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் குவிய ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவில் ரசிகர்களும் குவிந்தனர். சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார். இஸ்லாமியர்களை போல தலையில் தொப்பி அணிந்து கைலி அணிந்து படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசித்தபடி வந்த விஜய் இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர்.
இன்று விஜய் ரமலான் நோன்பு இருந்ததாகவும் 6:15 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 5000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. இதேபோல ராயப்பேட்டை ஒய்எம்சிஏ பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 6.15 க்கு விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே அவர் வருகை தந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு பின்னே அவருக்கு சிறப்பு அறை ஒன்றும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்?












Click it and Unblock the Notifications