சின்ன பையன் மாப்பிள்ளையா.. கிசுகிசு காதல்.. சீக்ரெட்டை ரஜினி உடைத்தாரா?.. பற்ற வைத்த பயில்வான்
ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டுள்ளர்
சென்னை: தனுஷ் - ஐஸ்வர்யா திருமணமே சர்ச்சையால் நடந்ததுதான் என ரஜினி கூறியதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
சினிமா பத்திரிகையாளரும், பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன்.. இவர் இப்போதைக்கு எந்த பத்திரிகையில் வேலை பார்க்கிறார் என்று தெரியவில்லை... அதேசமயம், பெரிதாக எந்த படத்திலும் நடித்து வரவில்லை.
ஆனால், கடந்த சில காலங்களாகவே பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியும் சினிமா சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும்..

அந்தரங்கம்
குறிப்பாக சினிமா நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்தி வருகிறார்.. இவர் சொல்லும் கிசு கிசு தகவல்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்ட இவரை பேட்டி எடுத்து வருகின்றன.. ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையிலும் இல்லாமல், சீனியர் நடிகர் என்ற முறையிலும் இல்லாமல், வயதில் பெரியவர் என்ற முறையிலும் இல்லாமல், ஒருவரின் அந்தரங்க விஷயத்தை, அவர்களின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசிவருவது பலரையும் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது..

பெருந்தன்மை
சம்பந்தப்பட்ட கிசுகிசுக்களில் சிக்கும் நடிகர்களும், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல், கடந்து சென்று தங்கள் பெருந்தன்மையை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்... அவர்களின் பெருந்தன்மைதான், பயில்வான் ரங்கநாதனுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது. ரஜினி குடும்பம் வரை இவரது கிசுகிசுக்கள் அசைத்து பார்த்துவிட்டது.. சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த ரங்கநாதன் திடீரென ஒரு விஷயத்தை பொதுவெளியில் போட்டு உடைத்தார்..

திருமணம்
"ரஜினி மகள் ஐஸ்வர்யாவையும், நடிகர் தனுஷையும் தொடர்புபடுத்தி நிறைய பத்திரிகைகளில் கிசுசிசுக்கள் எழுதின.. அதனாலேயே ரஜினி இந்த திருமணத்தை திருமணம் செய்து வைக்க நேரிட்டது... இந்த திருமணம் கிசு கிசு திருமணம்தான் என்று ரஜினியே ஒருமுறை சொல்லி உள்ளார்.. தனுஷ் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானார்.. 22 வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டார். உண்மையில் ஐஸ்வர்யாவும், தனுஷின் சகோதரியும் நெருங்கிய தோழிகள்...
Recommended Video

கிசுகிசுக்கள்
ஆரம்பத்தில் மீடியாவில் இவர்கள் இருவர் குறித்து சர்ச்சை செய்திகள் வெளியிட்டது.. ஆனால், தனுஷ் அதற்கு மறுப்பு சொன்னார்.. ரசிகர்கள் யாரும் நம்பவில்லை... அதற்கு பிறகுதான் இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாகவே பலரும் நம்பினார்கள்... அது பிறகுதான் உண்மை என்பதும் தெரியவந்தது. 2 குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகள் மத்தியில் உருவான இந்த காதல் விவகாரம் குறித்து இணைந்து பேசி சுமூகமாக முடிவெடுத்தனர்... இவர்கள் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், தன்னை விட வயது மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் தனுஷ்" என்றார்.












Click it and Unblock the Notifications