அன்று ஓபிஎஸ்ஸுடன் சந்திப்பு.. "இன்று" முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பாக்யராஜ்.. விஷயமே வேறயாமே!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் சந்தித்து பேசியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு என்பது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள சங்கத்தில் இதற்கான தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கே பாக்யராஜ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் போட்டியிட்டார்.

எத்தனை வாக்குகள்
அதில் கே பாக்யராஜ் 192 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய்யின் தந்தை எஸ்ஏசி 152 வாக்குகளையும் பெற்றார். எனவே 40 வாக்குகள் வித்தியாசத்தில் பாக்யராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாக்யராஜ் கலந்து கொள்ள கூடாது என பலர் முயற்சிதத்தாக அவரே குற்றம்சாட்டியிருந்தார். தன்னை சுற்றி சதி வலை பின்னப்பட்டதாகவும் தான் ஒவ்வொருவரையாக சந்தித்து ஆதரவை திரட்டி அணியை உருவாக்கியதாகவும் ஒரு வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர் வென்றுள்ளார்.

தேர்தல்
இந்த தேர்தலில் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். இந்த நிலையில் இயக்குநர் கே பாக்யராஜ் நேற்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ், எங்களை போன்றவர்களுக்கு எப்படி எழுதுவது என்பதை கற்று கொடுத்தவரே கருணாநிதிதான்.

எம்ஜிஆர் சிவாஜி
கருணாநிதி எழுத்தால் எம்ஜிஆர் புரட்சி நடிகராகவும் சிவாஜி கணேசன் நடிகர் திலகமாகவும் உருவெடுக்க முடிந்தது. அவரது எழுத்துகள் மூலம் எங்களை போன்ற வசனகர்த்தாக்களும் உருவாகியுள்ளோம். என்னுடைய எழுத்தை கருணாநிதி மதித்தார். எழுத்தாளர் சங்கம் என்றாலே எனக்கு நினைவில் வந்தது கருணாநிதிதான்.

எம்ஜிஆர் ரசிகன்
நான் எம்ஜிஆர் ரசிகனாக இருந்து கொண்டு கருணாநிதியை அவ்வப்போது சந்திப்பதால் என்னை பலரும் விமர்சிப்பார்கள். ஆனால் எம்ஜிஆர் என்னிடம் எதையுமே கேட்டதில்லை என்றார். பாக்யராஜ் பாஜகவில் இருந்து கொண்டு ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார் . இதை பார்த்து பாக்யராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என செய்திகள் வெளியாகின.

ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்
ஆனால் தான் ஓபிஎஸ்ஸை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக அண்மையில் ஒரு தமிழ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தான் மரியாதை நிமித்தமாகவே ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். ஆனால் அவரும் அவரது ஆதரவாளர்களும்தான் தவறாக புரிந்து கொண்டார்கள். அதிமுக ஒன்றுபட தான் யாரிடமும் பேச தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications