அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்... பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.!
சென்னை: நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மீண்டும் அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.ஜி.ஆரின். கலை உலக வாரிசாக கருதப்படும் பாக்யராஜ் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சில ஆண்டுகள் இருந்தார். இதனிடையே அங்கேயிருந்து விலகி இப்போது அரசியல் பார்வையாளராக மட்டும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரை மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான அசைன்மெண்ட் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

பாக்யராஜ்
திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் கே.பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார். அவரது திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகளில் இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்கும் சுவர் விளம்பரங்களை பலரும் பார்த்திருக்கக் கூடும். அந்தளவு எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட கே.பாக்யராஜ் அவரது கலை உலக வாரிசாகவும் அறியப்படுகிறார்.

அமைதி காக்கிறார்
அதிமுகவுக்காக கடந்த கால தேர்தல்களில் பரப்புரை செய்த பாக்யராஜ் கட்சி ரீதியாக எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. இதனிடையே ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் கருணாநிதி முன்னிலையில் இணைந்தார். அதைத் தொடர்ந்து திமுகவுக்கு ஓட்டுக் கேட்டு பிரச்சார பயணங்களை மேற்கொண்டார். நாளடைவில் அங்கிருந்தும் ஒதுங்கி இப்போது எந்த இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார்.

சிலாகித்து பேசுவார்
இந்நிலையில் அவரை மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பாக்யராஜின் வருகை மூலம் பிரச்சாரத்தில் பயன் கிடைக்கும் என நம்புகிறது அதிமுக தலைமை. ஏனெனில் இவரளவுக்கு எம்.ஜி.ஆரை பற்றி பொதுமக்கள் மத்தியில் வேறு யாரும் சிலாகித்து பேச முடியாது. மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை நினைவுகூற வைக்கும் திறமை பாக்யராஜுக்கு உண்டு.

பதில் இல்லை
இதனால் அவருக்கு அழைப்புவிடுத்து இணைப்பை எதிர்பார்க்கிறது அதிமுக தலைமை. ஆனால் பாக்யராஜ் தரப்பில் இன்னும் உறுதியான பதில் எதுவும் தரப்படவில்லை. காரணம் பாக்யராஜ் மீண்டும் கட்சியில் இணைந்து பிரச்சாரத்துக்கு செல்வது அவரது குடும்ப உறுபினர்களுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications