Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறுபவன் நான் இல்லை, என்னை தற்போது புதிதாக வந்தவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என நடிகரும் திமுக நிர்வாகியுமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 14 வயதில் திமுக விற்கு வாக்கு சேகரித்தவன் நான், 25 ஆவது வயதில் கலைஞரின் எழுத்தில் கதாநாயகனாக நடித்து அவர் இதயத்தில் இடம் பிடித்தவன் நான்..

Bose Venkat

கலைஞருக்கு பிறகு தளபதியோடு நெருங்கி பழகியவன், அவரது ஆதரவோடு 2011, 2016, 2021 ஆகிய சட்டசபைத் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சென்றவன் நான்.. 2021 ஆட்சிக்கு வந்த பிறகு கலைமாமணி தேர்வு குழு, சினிமா வாரியம், மற்றும் சின்னத்திரை தேர்வு குழுவில் இடம் பெற்றவன் நான்.. நான் முழு நேர அரசியல் களத்தில் பயணிப்பவன்.

திமுக தான் என் மூச்சு என் பேச்சு.. ஒரு சீட்டு கிடைக்காததால் கட்சி மாறுபவனோ கொள்கை மாறுபவனோ நான் கிடையாது.. நான் அதற்காக திமுகவில் இல்லை.. தலைவரின் அன்பிற்கும், மக்கள் பணிக்கும் ரசிகன் நான்.. நான் திமுக காரன்.. என்னை தற்போது கழகத்திற்கு வந்தவர்களோடு ஒப்பிட்டு பேச வேண்டாம்.. மீண்டும் சொல்கிறேன் நான் திமிர் பிடித்த "திமுக" காரன்.

சிரஞ்சீவி எனும் நடிகர் ஆந்திர அரசியலில் நுழைந்து (2008) பெரிய அதிர்வை ஏற்படுத்தினார்.. திரும்பிய பக்கமெல்லாம் பெரும் கூட்டம்.. பாலக்கோடு, திருப்பதி எனும் இரு இடங்களில் போட்டியிட்டார்.. மாபெரும் தோல்வியை தழுவினார். அரசியல் வேறு, சினிமா வேறு என்று உலகுக்கு உணர்த்தினார்.. (இத நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. அதுக்கு சொல்றேன்) என பதிவிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்றைய தினம் வெளியானது. இந்த தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு 2021 இல் வந்த பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம் ஆகியோருக்கும் அண்மையில் வந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் விருப்பமனு தாக்கல் செய்த சத்யராஜ் மகள் திவ்யா, தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த வைஷ்ணவி, டிகேஎஸ் இளங்கோவனின் மகள் மாதவி, நீண்டகாலமாக திமுகவில் இருக்கும் போஸ் வெங்கட் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கவில்லை.

போஸ் வெங்கட் ஒவ்வொரு தேர்தலுக்கு அறந்தாங்கி தொகுதியை கேட்டு விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த 2026 தேர்தலுக்கு அறந்தாங்கி,
விருகம்பாக்கம் ஆகிய இரு தொகுதிகளையும் கேட்டு போஸ் வெங்கட் விருப்பமனு கொடுத்திருந்தார்.

ஆயினும் அவருக்கு சீட் வழங்காததால் புதிதாக திமுகவுக்கு வந்தவர்களுக்கு கூட சீட் கொடுத்துட்டாங்க, போஸ் வெங்கட்டுக்கு கொடுக்கவில்லை, அதனால் அவர் அதிருப்தி, வேறு கட்சியில் இணைகிறார் என்றெல்லாம் சமூகவலைதளத்தில் தகவல்கள் உலா வந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ் வெங்கட் இந்த பதிவை போட்டியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+