திமுகவுக்கு போட்டி பாஜகவா? இது எப்படி இருக்கு தெரியுமா? உதாரணத்தோடு அண்ணாமலையை உரசிய போஸ் வெங்கட்
சென்னை: திமுக குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த கருத்துக்கு நடிகர் போஸ் வெங்கட் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது, பாஜகவை வலுப்படுத்துவது குறித்த பல்வேறு ஆலோசனைகளை அண்ணாமலை நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் திமுக குறித்தும் பேசியிருந்தார்.
அதாவது, "தமிழகத்திலிருந்து அதிக உறுப்பினர்களை மக்களவைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அனுப்பி வைக்கும். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போட்டி. தமிழகத்தின் 39 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நாளை சேரலாம். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதே எங்கள் நோக்கம்" என்று கூறினார். இதனையடுத்து, 'அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடுவீர்களா?' என்கிற கேள்விக்கு, "உரிய நேரம் வரும் போது பதில் கூறுவேன்" என்று கூறினார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் அதிமுகவும் பாஜகவும் இணைந்துதான் தமிழ்நாட்டில் இந்த தேர்தலை எதிர்கொள்ளும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் சமீபத்தில் அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அதிமுக பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய விஷயங்களை பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை ஏன் பங்கேற்றார் என்று கேள்வியெழுப்பி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில்தான் அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்து பேசியிருந்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தங்கள் கட்சி தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறி இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது. இதற்கு பாஜகவின் மேலிடத்திலிருந்து அண்ணாமலையிடம் சரமாியாக கேள்வி எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சலசலப்புக்கு மத்தியில்தான் தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்தான் "மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போட்டி" என அண்ணாமலை கூறியிருந்தார்.

இதற்கு திமுக நிர்வாகிகள் பலர் விமர்சனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் போஸ் வெங்கெட் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து நான்தான் இனிமேல் உங்களுக்கு போட்டி என்று( போஸ் வெங்கட் ) சொன்னால் எவ்வளவு காமெடியாக இருக்குமோ அவ்வளவு காமெடி அண்ணாமலை சொன்ன தி.மு.க விற்கு போட்டி பா.ஜ.க என்பது" என்று எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது தற்போது ஸ்கிரீன் ஷாட்களாக பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications