ஜொலி ஜொலிக்கும் பென்சில் "பெருமாள்".. வச்சு செஞ்சது யார்னு பார்த்தீங்களா.. அடேங்கப்பா.. சூப்பரே!
சென்னை: சோஷியல் மீடியா முழுவதும் பென்சில் பெருமாள் ஜொலித்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம் நடிகர் பிரம்மானந்தம்தான்.. அப்படி ஒரு அசத்தல் புத்தாண்டு பரிசை சக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஓவியமாக வழங்கி இருக்கிறார்.
பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம்... அங்கு ஒரு ரிலீஸ் ஆகிறதென்றால், அதில் கண்டிப்பாக பிரம்மாவும் இருப்பார்... அந்த அளவுக்கு பிஸியானவர். தமிழிலும் இவர் ரொம்ப ஃபேமஸ்.

கில்லி, மொழி, குசேலன், சத்யம், தோனி, லிங்கா என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.. ஓரிரு சீன் வந்தாலும்கூட நிறைவான நடிப்பை தந்துவிட்டு செல்லும் மிகச்சிறந்த திறமைசாலி பிரம்மானந்தம்!
ஆனால், இவருக்குள் ஒரு அபூர்வ திறமை ஒளிந்திருப்பதே இந்த லாக்டவுன் சமயத்தில்தான் எல்லாருக்கும் தெரியவந்தது.. ஊரடங்களில் எல்லாரும் வீட்டிற்குள் இருந்தால், பிரம்மா மட்டும் தன்னுடைய நேரத்தை ஓவியம் வரைந்தே அசத்திவிட்டார்.
இவரது ஓவியங்கள் ஒவ்வொன்றும் இணையத்திலும் வைரலானது.. அதற்கு காரணம் அந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருந்ததுதான்.. இன்னொரு ஸ்பெஷலும் உள்ளது.. தன் ஓவியங்கள் அனைத்தையும் வெறும் பென்சிலில்தான் வரைவார்.. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுவது, தெலுங்கு கவிஞர் ஶ்ரீ ஶ்ரீ, ரவீந்திரநாத் தாகூர் உட்பட பலரின் ஓவியங்களை பென்சிலில் வரைந்தார்.

இவருக்குள் இத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கிறதா என்று ஆந்திராவே அதிசயித்து போய்விட்டது.. இப்போதும் ஒரு ஓவியம் வரைந்துள்ளார்.. அது வெங்கடேச பெருமாளின் ஓவியம்.. அதுவும் பெருமாளை அசத்திவிட்டார்.. இந்த ஓவியத்தை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கி இருக்கிறார் பிரம்மானந்தம்.. மொத்தம் 45 நாட்கள் ஆனதாம் இந்த டிராயிங் வரைவதற்கு.
இந்த படத்தை தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ள அல்லு அர்ஜுன், விலைமதிக்க முடியாத இந்த பரிசுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.. இந்த பெருமாள் ஓவியம் ஒரு காலண்டர் போல தெரிகிறது.. ஆனால், வரைந்தது பென்சில் என்றே தெரியவில்லை.. அவ்வளவு தத்ரூபமாகவும், அழகாகவும் ஜொலிக்கிறார் பென்சில் பெருமாள்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications