Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் தாமு பேசப் பேச.. தேம்பி தேம்பி அழுத காரைக்கால்.. கலெக்டர் முன்னாடி உணர்ச்சிவசப்பட்ட மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.. விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் கல்வி ஆலோசகர் டாக்டர். தாமு, மாணவர்கள், மாணவிகள் முன்பு ஆற்றிய இந்த உரைதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு.. டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்பதே இவரது பெயர்.

Actor Dhamu Emotional Speech Heart Touching

டைரக்டர் பாலசந்தரின் சீடர் என்பது உட்பட சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் நிறைய உண்டு என்றாலும், யாரும் அறிந்திராத பல முகங்கள் தாமுவுக்கு உண்டு.

பிரபல நடிகர் தாமு

இவர் ஒரு கல்வி சேவையாளர்... 15 வருடத்துக்கு மேல் இந்த சேவையை செய்து வருகிறார்... சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ், "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது உட்பட நூற்றுக்கும் அதிகமான விருதை பெற்றவர்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கியவர். இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும்.

விழிப்புணர்வு உரைகள்

இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார் தாமு.. கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் முயன்று வருபவர்.. இப்படிப்பட்ட சேவைகளுக்காக, டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..

தமிழகம் உட்பட, நாட்டின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட தன்னுடைய அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்து வரும் சேவை அளப்பரியது.

அதிலும், கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறார் தாமு.. அந்தவகையில் தாமுவின் விழிப்புணர்வு வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..

மரியாதையை குலைக்கும்

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தாமு கலந்து கொண்டு உரையாற்றினார்.. அதில், "நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களை அமைதியாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.. தேவையற்ற சத்தம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.. கைகளை தட்டுவது மட்டுமே ஆற்றலைத் தரும்.. கூச்சலிடுவது மாணவர்களுக்கான மரியாதையைக் குறைக்கும்..

எதையும் குறையாகப் பார்க்கக் கூடாது, அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். ஒரு அம்மா, தன் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இந்த உலகில் தான் பார்த்ததை எல்லாம், தான் கேட்டதை எல்லாம் காட்ட நினைப்பார்.. ஆனால், அப்பா ஒரு படி மேலே போய் கடவுளையே காட்டுவார்..

Actor Dhamu Emotional Speech Heart Touching

உணர்ச்சிவசப்பட்ட மாணவ, மாணவிகள்

நான் உங்களை சாப்பிட்டியானு கூட கேட்டதில்லையே அப்பா? என்று எத்தனையோ பேர் கொரோனா காலத்தில் அழுது வேதனைப்பட்டார்கள்.. உங்களை பெற்ற பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள், உங்கள் 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு முதல் இப்போது கல்வி கற்று தரும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

பெற்ற தாயை உதைக்கிறீர்களே, அப்பா அம்மாவின் தவிப்பைப் புரிந்து கொள்ளவில்லையே.. அப்பாவோட கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா? அவர் சிந்தும் ஒவ்வொரு சொட்டு வியர்வையிலும் உங்கள் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.. உங்க அப்பா உங்களுக்காக எத்தனையோ அவமானங்களைத் தாங்கி, கஷ்டப்பட்டு சம்பாதித்து உங்களைப் படிக்க வைக்கிறார்" என்றெல்லாம் உருக்கமாக பேசினார்.

தாமு பேச பேச, அவரது உணர்ச்சிமிகு உரையைக் கேட்ட மாணவிகள் தங்களை மறந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டனர்.. விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் கல்வி ஆலோசகர் டாக்டர். தாமு ஆற்றிய இந்த உரைதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+