ப்ச் பாவம்.. கடைசியில் மகன் முகத்தை கூட பார்க்க முடியலையே.. மனோபாலா மரணம்.. அதிர்ச்சி தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மனோபாலா மரணம் அடைந்த நிலையில், அவரால் தனது மகனின் முகத்தை கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளரும், பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மரணம் சினிமா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Actor-director Manobala could not even see his sons face before dying: What happened?

இல்லத்தில் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு மனோபாலா திடீரென மரணம் அடைந்தார். கடந்த 15 நாட்களாக அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கல்லீரல் பிரச்சினை காரணமாக ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மரணம் அடைந்தார்.

மகன் முகத்தை பார்க்கவில்லை;

மனோபாலா மரணம் அடைந்த நிலையில், அவரால் தனது மகனின் முகத்தை கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனோபாலா தனது மனைவி உஷா மகாதேவன் உடன் சென்னையில் தங்கி வந்தார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளார். அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

அங்கேயே வேலை பார்த்து வரும் இவரின் மகன் ஹரிஷ் மனோபாலாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அப்பாவின் மரண செய்தி கேட்டு அவர் சென்னைக்கு அவசரமாக புறப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனோபாலா தனது மனைவி உஷா மகாதேவன் வீட்டில் தற்போது தனியாக கஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனோபாலா வீட்டிற்கு அவரின் வீட்டு பணியாளர்கள், சிலர் சினிமா பிரபலங்கள், உறவினர்கள் சிலர் தற்போது மனோபாலா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கே பாதுகாப்பு கருதி தற்போது போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சினிமா பிரபலங்கள் பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கலில், பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதிர்ச்சி

தமிழ் சினிமா உலகை அவரின் மரணம் உடைத்து போட்டு உள்ளது. எல்லோருடனும் அன்புடனும், நட்புடனும் இருப்பவர் நடிகர் மனோபாலா. சினிமா உலகில் மிகவும் நல்ல பெயர் கொண்டவர் இவர்.

இவர் மிகவும் எளிமையான குணம் கொண்டவர். சமையல் கலையில் நல்ல அனுபவம் கொண்டவர். படப்பிடிப்பு சமயங்களில் சக நடிகர்களுக்கு இவரே உணவு சமைத்து கொண்டு செல்வார். காலத்திற்கு ஏற்ப தன்னை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு இருப்பவர்.

சினிமா உலகில் 1994ல் இருந்து இருக்கும் இவர் சமீபத்தில் யூ டியூப் உலகிலும் கலக்கி வந்தார்.

வேடங்கள்:

இவர் தயாரிப்பாளராக, இயக்குனராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் இதுவரை 40 படங்களை இயக்கி உள்ளார். 16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கி இருக்கிறார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து இருக்கிறார். 69 வயதாகும் இவர் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல்வேறு தயாரித்து உள்ளார்.

1994ல் தாய்மாமன் என்ற படத்தில் தாய் மாமன் என்ற படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+