வீங்கிய உடலும் முகமும்.. செயலிழந்த கிட்னி! காலமானார் வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன்
சென்னை: வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பராக நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு.
பல புதுமுகங்களுக்கு அறிமுகம் கொடுத்த இந்த திரைப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

நடித்த படங்கள்
இந்த படத்தில் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பராக நடித்து இருக்கும் மற்றொரு நடிகர்தான் ஹரி வைரவன். இவர் நடிகர் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, விஷ்ணு விஷால் நடித்த குள்ளநரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்து இருக்கிறார்.

உடல்நிலை பாதிப்பு
இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு போதிய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வறுமையில் வாடிய ஹரி வைரவனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதய நோய் ஏற்பட்டதுடன் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதன் காரணமாக அவருக்கு கால்கள் வீங்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்து உள்ளார்.

பொருளாதார நெருக்கடி
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பேசுவதற்கு கூட சிரமப்பட்டு இருக்கிறார் ஹரி வைரவன். இந்த நிலையில் தனக்கு 11 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருப்பதாகவும், உடலின் பல பாகங்கள் வீக்கமடைந்து பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், மருத்துவத்துக்கு செலவு செய்தே மொத்த நகை, பணம் காலியாகிவிட்டதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் ஹரி வைரவன்.

கருணை கொலை
தன்னை கவனித்துக்கொள்வதற்கு மனைவி படும் சிரமத்தை தன்னால் காண முடியவில்லை என்று கூறிய அவர், கருணை கொலை செய்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவர்கள் தனது உயிருக்கு 6 மாதங்கள் கெடு விதித்துவிட்டதாகவும், தற்போது சிகிச்சைக்கு கூட பொருளாதாரம் இன்றி சிரமப்படுவதாகவும், மரணத்துக்கு பிறகு மனைவியையும் குழந்தைகளையும் யார் கவனித்துக்கொள்வார்கள் எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.

பொருளாதார உதவி
இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டது. பலருக்கு வேதனையை ஏற்படுத்திய ஹரி வைரவனின் பேட்டியை கண்டவர்கள் அவருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினர். நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டோரும் உதவி செய்தார்கள். இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஹரி வைரவன்.

மனைவி நம்பிக்கை
இந்த சிகிச்சையின் மூலம் ஹரி வைரவனை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், உடல் வீக்கத்தை குறைக்க இருப்பதாக மருத்துவர் தன்னிடம் தெரிவித்ததாக மக்களுக்கு நன்றி தெரிவித்து அவரது மனைவி வீடியோ வெளியிட்டார். மீண்டும் ஹரி வைரவனை நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவரை சினிமாவில் நடிக்க வைப்பேன் எனவும் அவரது மனைவி தெரிவித்தார்.

காலமானார்
இந்த நிலையில் இன்று அதிகாலை 12:15 மணியளவில் நடிகர் ஹரி வைரவன் மதுரையில் காலமானார். இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கடச்சநேந்தலில் ஹரி வைரவனுக்கு இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications