41 பேரின் மரணத்தில்தான்.. ஜோக் சொல்லுவீங்களா ஜீவா? மன்னிப்பு கேளுங்கள்.. விளாசும் நெட்டிசன்கள்!
சென்னை: நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியாகி ஹிட் அடித்து உள்ளது. இந்த படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் போல நடிகர் ஜீவா பேசியது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிரான கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
கரூரில் 41 பேர் விஜயின் தவெக கூட்டத்தில் மரணம் அடைந்தனர். இதில் உயிரிழந்த மக்களை பார்த்த சோகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ரூல்ஸை பாலோ பண்ணுங்கடான்னு சொன்னோமே என்று கதறி அழுதார். பல குழந்தைகள் பலியானதை நேரில் பார்த்த அமைச்சர் கலங்கி அழுத காட்சி பலரை உலுக்கி இருக்கும்.

ஒரு மரணம் தொடர்பான விவகாரத்தை வைத்து காமெடி செய்வது தமிழர்களின் இயல்பு அல்ல. எதிரிகளின் மரணத்திற்கு கூட கண்ணீர் விடுவது வழக்கம். ஆனால் நடிகர் ஜீவா இதை காமெடி வசனம் போல தலைவர் தம்பி தலைமையில் பயன்படுத்தி இருக்கிறார். அதோடு விடாமல்.. இந்த படத்தின் நிகழ்ச்சிகளிலும் அதை காமெடி என்று நினைத்து ஜீவா பேசி வருகிறார்.
ஜீவாவிற்கு கண்டனங்கள்
இதையடுத்து தற்போது ஜீவாவிற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நெட்டிசன்கள் வைக்கும் விமர்சனங்களில், ஒன்றரை வயசு குழந்தை நெஞ்செலும்பு நொறுங்கி, குடல் வெளில வந்து கொடூரமா இறந்துருக்கு. இதே மாதிரி நிறைய பிஞ்சு குழந்தைங்க இறந்து போனதை யார் பார்த்தாலும் எதிரியா இருந்தாலும் கண்ணீர் விட்டு கதறதான் செய்வாங்க.
அந்த மாதிரி சூழ்நிலையில சொன்ன வார்த்தைய வச்சு நக்கல் பண்ண தோணுதுன்னா மண்டையில கொஞ்சம் கூட கூறு இல்லன்னுதானே அர்த்தம்.

எல்லாத்தையும் நக்கலா பாக்குறவன்லாம் ஜெயிச்சா என்ன, தோத்தா என்ன?! கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டான், இதெல்லாம் ஸீனா வைக்கலாமா, வேணாமான்னு. அன்பில் பேசுனத மீமா போட்டாலே மனசாட்சி இல்லையாடானு கேக்க தோணும். இவன் அத ஸ்டேஜ்ல சொல்லி அதுக்கு கிளாப்ஸ் வேற பண்றானுக.
ஜீவா அமைச்சர் அன்பில்மகேஷ் தான் கிண்டல் பண்ணான்,இறந்தவங்களை இல்லனு தர்கம் பண்ற அணில்களை பாத்து கேக்குறேன்,உங்க அப்பா செத்து போய்டார்னு நீ வாய்லையும் வயித்துலையும் அடிச்சுட்டு அழுறதை பக்கத்துல இருந்து பாக்குற உன் நண்பன் அதை கிண்டல் பண்ணி சிரிச்சான்னா உன்னை மட்டும்தான் கிண்டல் பண்ணான்னு எடுத்துக்குவிங்களாடா?அவனுக்கு இறந்தவர் பற்றியோ உன்னோட துயரத்தை பத்தியோ எந்த வருத்தமும் இல்லைனு தான்டா அர்த்தம். ஒரு மனிததன்மையே இல்லாத சுயநலப்பேயை தலைவனா ஏத்துகிட்டு நீங்க எல்லாரும் உங்க மனிதத்தை இழந்துட்டு இருக்கீங்கடா.ரொம்ப சீக்கிரமா பொதுசமூகத்துல இருந்து சீய்னு ஒதுக்கி வைக்கிற இடத்துக்கு வந்துருவீங்க.

படத்துல வேணும்ன்னா 'Dark hunlmour'னு சொல்லிச் சமாளிச்சுக்கலாம். மீம் உலகமும், இரக்கமில்லாமத்தான் அணுகும்ன்றதையும் கூட ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். 'மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்'றாப்ல Tag line லெவல்ல டீல் பண்றதுல்லாம் மனசாட்சி இல்லாதவர்கள் செய்யுற ஈனத்தனமான செயல்.

இது மிக மோசமான குணம்.. இந்த குணம் எங்கிருந்து வருகிறது.. முதலில் மன்னிப்பு கேளுங்கள் ஜீவா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். பொது நிகழ்வில் ஜீவா பேசியது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிரான கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications