முரட்டு உருவம்.. மழலை உள்ளம்.. என் நண்பர் அம்பரீஷ்.. கமல்ஹாசன் இரங்கல்

அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரட்டு உருவம்தான்.. ஆனால் மழலை உள்ளம் கொண்டவர் என்று அம்பரீஷ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகவும் கஷ்டப்பட்டு, படிப்படியாக வளர்ந்து ஹீரோவானவர் அம்பரீஷ். அந்த காலகட்டங்களில் இருந்தே தமிழ் திரையுலகிலும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார் அம்பரீஷ்.

80'களில் தமிழகத்தின் உச்சத்திற்கு வளர்ந்து வரும் நட்சத்திரங்களாக இருந்த ரஜினி, கமல் இருவருமே அம்பரீஷ் உடன் நெருங்கிய நட்பினை வைத்திருந்தார்கள். 40 வருடங்கள் கடந்தும் இவர்களுடனான நட்பு நீடித்துதான் வந்தது.

தலைவர்கள் இரங்கல்

தலைவர்கள் இரங்கல்

இந்நிலையில், சிறுநீரகக் கோளாறு பிரச்சினை காரணமாக நேற்று அம்பரீஷ் உயிரிழந்தார். இதனால் கன்னட, தமிழ் சினிமா உலகம் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. இதையடுத்து பல்வேறு தலைவர்கள், நடிகர்கள் அம்பரீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கண்ணீர் இரங்கல்

கண்ணீர் இரங்கல்

அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது இறுதி சடங்கிலும் பங்கேற்க பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு அம்பரீஷ் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கலங்கினார்.

கமல் இரங்கல்

இந்நிலையில், அம்பரீஷின் மற்றொரு நண்பரான நடிகர் கமல், தனது இரங்கலை சொல்லி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டு இருப்பதாவது:

மழலை உள்ளம்

மழலை உள்ளம்

"42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+