ராஜ்யசபா எம்பி கனவில் நடிகர் கார்த்திக் : குஷ்புவிற்கு பிரச்சாரம்...அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவு
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவின் வெற்றிக்காக அந்த தொகுதி முழுவதும் பிரசாரம் செய்வேன் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் எம்எல்ஏவாக பேசுவதை விட நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்பியாக என்னுடைய குரல் ஒலிக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் கார்த்திக். அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார் நடிகர் கார்த்திக். ஆயிரம் விளக்குத் தொகுதியில் குஷ்புவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
நடிகர்களே வேட்பாளர்களாக இருக்கும் தொகுதிகளில் தேர்தல் களைகட்டியுள்ளது. கோவை தெற்கில் கமல் போட்டியிட அவரை காணவே கூட்டம் கூடுகிறது. அந்த மக்கள் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பது யாராலும் சொல்ல முடியாது.

பாஜகவின் குஷ்பு
பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் நடிகை குஷ்பு. தினசரியும் மக்களை சந்திப்பது வாக்கு சேகரிப்பது என ரொம்பவே பிசியாக இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் எம்எல்ஏவாக தனது குரல் ஒலிக்க வேண்டும் என்று ரொம்பவே பாடுபடுகிறார் குஷ்பு.

குஷ்புவுக்கு ஆதரவு கொடுத்த கார்த்திக்
நடிகை குஷ்புவிற்கு மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் ஆதரவு கொடுத்துள்ளார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் வேட்பாளர் குஷ்புவிற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யப்போகிறார் கார்த்திக்.

அதிமுக கூட்டணி
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்கனவே நாங்கள் இருக்கும் அதிமுக கூட்டணிலேயே தொடர்கிறோம் என்று கூறினார். எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிட 2 சீட் தருவதாக சொன்னார்கள். ஆனால் அதை வைத்துக் கொண்டு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. எனவே 2 சீட்டுகளை ஏற்க மறுத்துவிட்டேன் என்றும் கூறினார்.

பாஜகவில் சேரவில்லை
பாஜகவில் சேர எனக்கு அழைப்பு வந்தது உண்மை. ஆனால், நான் தனிக்கட்சி நடத்துகிறேன். அதற்கென்று தனிக்கொள்கை இருக்கிறது. அதனால் பாஜகவில் சேரவில்லை என்றும் கூறினார்.

எங்கள் தேர்தல் அறிக்கை
தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து எங்கள் ஆதரவை முறைப்படி தெரிவித்துவிட்டேன். சீட்டுக்கு பதிலாக மக்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறோம். அதை செய்து கொடுக்கும்படி கேட்டு இருக்கிறோம். அந்த கோரிக்கைகள் எங்கள் தேர்தல் அறிக்கையில் விரிவாக வெளியிடப்படும் என்றும் கார்த்திக் கூறினார்.

ராஜ்யசபா எம்பி
மக்களின் உரிமைக்குரலை எழுப்ப சட்டமன்றத்தை விட நாடாளுமன்றம் சக்தி வாய்ந்தது. அதனால் நான் ராஜ்யசபா எம்.பி.ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அது பற்றி இப்போது விரிவாக பேச முடியாது என்றும் கூறினார் கார்த்திக்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம்
என்னால் எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் சென்று தேர்தல் பிரசாரம் செய்வேன். கூட்டணியில் இணைவதற்காகவும், பிரசாரம் செய்வதற்காகவும் எந்த பணமும் பெறவில்லை. பெறவும் மாட்டேன் என்றும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications