சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கம் மறுபடியும் களமிறங்கிடுச்சே.. 'நவரசா' கார்த்திக் அதிமுகவுக்கு ஆதரவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஏது.. மனித உரிமை காக்கும் கட்சியா? ஜெர்க் ஆகாதீங்க.. சாந்தி.. சாந்தி... நடிகர் கார்த்திக்கின் கட்சிதான் இது. ஒரு சிறிய இன்ட்ரோவுக்கு பிறகு விஷயத்துக்கு வறேன்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு கார்த்திக்கின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

 படு தோல்வி

படு தோல்வி

2006ம் ஆண்டு முதல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இருந்த நடிகர் கார்த்திக் 2009ஆம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கினார். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி எனும் பெயரில் கட்சி தொடங்கிய கார்த்திக், 2009 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தார். ஆனால், விருதுநகர் மற்றும் தேனி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி தோல்வியடைந்தது.

 போராட வேண்டிய நேரம்

போராட வேண்டிய நேரம்

இதையடுத்து, கடந்த 2018ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கலைத்துவிட்டு, "மனித உரிமை காக்கும் கட்சி'' என்ற பெயரில் புதுக் கட்சியை அறிவித்தார் கார்த்திக். அப்போது, 'வாழ்வதற்காக அனைத்து தரப்பு மக்களும் தினம், தினம் போராட வேண்டிய நிலை தற்போது உருவாகி இருக்கிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் மக்கள் போராளிகளாகத்தான் மாறுவார்கள். போராட வேண்டிய நேரத்தில் போராடி தான் ஆக வேண்டும். அதனால் தான் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளேன்' என்று விளக்கம் கொடுத்தார்.

 எட்டாக்கனியாக வெற்றி

எட்டாக்கனியாக வெற்றி

கார்த்திக்கின் பலமே அவருக்கென்று கணிசமாக உள்ள தேவர் சமூக வாக்குகள் தான். இன்றும் அவருக்கென்று பல தேவர் இயக்கங்கள் பல்வேறு பகுதிகளில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றன. எனினும் தேர்தலில் வெற்றி என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது

 கார்த்திக் முடிவு

கார்த்திக் முடிவு

இந்த நிலையில் தான், தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுகவுக்கு இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம், தேவர் சமூகம் அதிகமிருக்கும் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மனித உரிமை காக்கும் கட்சி ஆதரவாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஃபாலோயர்கள் குஷி

ஃபாலோயர்கள் குஷி

சினிமாவிலும், அரசியலிலும் இருந்தும் இல்லாமல், பட்டும் படாமல், அதே இளமையுடன் , இருக்கும் கார்த்திக், 'அதிமுக ஆதரவு' எனும் அறிவிப்பின் மூலம் மீண்டும் அரசியல் களத்தில் என்ட்ரி கொடுத்திருப்பது கார்த்திக் ஃபாலோயர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபடியும் தங்கள் தேர்தல் பணிகளை அவர்கள் தூசித் தட்டத் தொடங்கியுள்ளனர்.

English summary
actor karthik's manitha urimai kaakum katchi supports admk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X