KPY Bala: டிட்வா புயலால் குண்டும் குழியுமான சாலை! சொந்த செலவில் ஜல்லி கொட்டி சரி செய்த கேபிஒய் பாலா
சென்னை: டிட்வா புயலால் சேதமடைந்த சாலையை நடிகர் கேபிஒய் பாலா இறங்கி சரி செய்த செயல் வைரலாகி வருகிறது. ஜல்லிகற்களை கொண்டு வந்ததும் அவரே கொட்டி நிரப்பியதை பார்த்த இரு சக்கர வாகன ஓட்டிகள் நேரடியாக சென்று பாராட்டுகளை தெரிவித்தனர்.

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 27ஆம் தேதி டிட்வா புயலாக மாறியது. இந்த புயலானது டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்னை வந்து அங்கிருந்து தெற்கு ஆந்திரா நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டிருந்தது.
அதிலும் இந்த புயல் கடலோர பகுதிகளுக்கு இணையாக பயணிப்பதால் இது கரையை கடக்காது என சொல்லப்பட்டது. மேலும் இந்த புயலால் அதிக அளவு காற்றும் இருக்காது, மழை இருக்கும் என சொல்லப்பட்டது.
டிட்வா என்றால் தீவு
டிட்வா என்றால் தீவு என்று அர்த்தம். மேலும் அழகான மலர் என்றும் ஒரு அர்த்தம் உள்ளதாம். இந்த புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டி போட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை அருகே வந்த இந்த புயல் சின்னத்தால் கடந்த 1, 2, 3 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மழையால் பாதித்த சாலைகள்
இந்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. இதனால் குண்டும் குழியுமான சாலைகளில் பலர் விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பெருங்களத்தூர் அருகே சாலை மோசமாக பழுதடைந்திருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலர் அவதியடைந்தனர்.
சென்னையில் பாலா சேவை
இந்த நிலையில் சென்னையின் புறநகர் பகுதியில் எந்த இடம் என தெரியவில்லை, அங்கு குண்டும் குழியுமான சாலைகளில் ஜல்லிக் கற்களை கொட்டி நடிகர் கேபிஒய் பாலா சரி செய்யும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலா
பாலா தனது சொந்த செலவில் ஒரு டிரக்கை வாடகைக்கு அமர்த்தி அதில் ஜல்லிக் கற்களுடன் செல்கிறார். எங்கெல்லாம் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அவரே ஜல்லிக் கற்களை கொட்டி, மம்பட்டியால் நிரவி விடுகிறார்.
ஜல்லிக் கற்கள்
பேண்ட்டை மடித்துக் கொண்டு ஜல்லியை வாரி கொட்டி சாலையை சரி செய்கிறார். இந்த காட்சியை பார்க்கும் வாகன ஓட்டிகள் பாலாவிடம் சென்று அவருக்கு கைகுலுக்கி பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்.
மருத்துவமனை
பாலா நீண்டகாலமாக தான் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில் சமூகசேவைகளை செய்து வருகிறார். மருத்துவமனைக்கு அதிவிரைவில் செல்ல மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். இது போல் பல்வேறு தருணங்களில் அவர் 4 , 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கிக் கொடுத்துவிட்டார்.
சமூக சேவை
அது போல் தான் வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த நிலத்தில், நடிகர் அமுதவாணனுடன் இணைந்து மருத்துவமனையை கட்டி வருகிறார். எத்தனையோ ஏழைகளுக்கு உதவி வருகிறார். அது போல் மாற்றுத்திறனாளிகளுக்கு கடை வைத்துக் கொடுக்கிறார். மழை வெள்ள காலங்களில் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுகிறார். இப்படி பாலா செய்யும் சமூக சேவைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications