கெட்ட போதையில் குத்தாட்டம்.. கொக்கைன் சப்ளையரா கிருஷ்ணா? விடிய விடிய நீடித்த விசாரணை! துருவிய போலீஸ்
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் 14 மணி நேரத்திற்கு மேலாக விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா வேறு யாருக்கும் கொடுத்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். மேலும் அவரது செல்போன் எண்கள், வங்கி பரவர்த்தனைகள் குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
பாரில் தகராறு செய்ததாக மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் பலருக்கு போதை பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது.
இதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் படம் நடித்ததற்கு சம்பளம் தராமல் போதை பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து பிரசாத் தயாரிப்பில் நடித்த நடிகர்களின் பட்டியலை தயார் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை அடுத்து கழுகு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா மீதும் போலீசாரின் பார்வை விழுந்தது.
அவர் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவராகவே விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று நுங்கம்பாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் முன்னிலையில் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் ஆஜர் ஆனார். இதை அடுத்து கிருஷ்ணாவிடம் போலீசார் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை பொருள் தொடர்பாக பிரசாத் உடன் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருக்கிறதா? பிரசாத் தயாரிக்கும் திரைப்படத்திற்கு கிருஷ்ணா நிதி உதவி செய்தாரா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் கிருஷ்ணா வைத்திருந்த செல்போனில் இருந்து சென்று அழைப்புகள், வாட்சாப் உரையாடல்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் கிருஷ்ணா போதை மருந்து பயன்படுத்தியது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருளாக பயன்படுத்த முடியாது எனவும், இதுவரை தான் போதைப்பொருள் பயன்படுத்தியது இல்லை என கிருஷ்ணா கூறியிருந்தார். இதற்கிடையே நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதுவரை எந்த போதை பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை என அவர் கூறியிருக்கும் நிலையில் மருத்துவ முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவோடு நல்ல நட்போடு இருந்திருக்கிறார். அவருடன் சில பார்ட்டிகளிலும் கலந்து கொண்டிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. போதை பொருட்களை பயன்படுத்தினால் அது 45 நாட்கள் வரை உடலில் இருக்கும் என்பதால் அந்த காலகட்டத்திற்குள் சோதனை செய்தால் மட்டுமே அதனை கண்டுபிடிக்க முடியும். அதனை தாண்டி இருந்தால் கண்டுபிடிக்க முடியாது. இதை அடுத்து சில நடிகர் நடிகைகள் தலைமறைவாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications