Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஞ்சியோ செய்த உடம்பு சார்! கொக்கைனுக்கு நான் ஃபிட் இல்லை! மருத்துவ சான்று கொடுத்த நடிகர் கிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு வாயுக் கோளாறு, இதய படபடப்பு இருப்பதாக மருத்துவ சான்றிதழை போலீஸாரிடம் நடிகர் கிருஷ்ணா ஒப்படைத்தார். அவருடைய வீட்டில் 2ஆவது நாளாக நடந்து வரும் விசாரணையின் போது அவர் அந்த சான்றிதழ்களை கொடுத்தார்.

போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடன் நெருங்கி பழகும் நடிகர் கிருஷ்ணாவும் போலீஸாரின் விசாரணை வளையத்திற்குள் வந்தார். அதற்கேற்ப அவர் தலைமறைவானதை அடுத்து போலீஸாரின் சந்தேக பார்வை அவர் மீது ஊர்ஜிதமாக திரும்பியது.

krishna srikanth chennai

நடிகர் கிருஷ்ணா, இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர், கழுகு படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து அவர் கேரளாவில் பதுங்கியிருப்பதாக தெரியவந்ததை அடுத்து அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் இவரே காவல் துறையில் ஆஜரானார்.

அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். கிட்டதட்ட 18 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நெருங்கிய நண்பர்கள். பார்ட்டிகளில் நாங்கள் ஒன்றாகவே கலந்து கொள்வோம்.

ஆனால் நான் போதை பொருள் பயன்படுத்தினேன் என வெளியான தகவலில் உண்மையில்லை. என்னால் அது போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்த முடியாது. ஏனென்றால் எனது உடல்நிலை அப்படி உள்ளது. எனக்கு வாயு கோளாறு உள்ளது. இரைப்பை அழற்சி உள்ளது.

இதயம் படபடப்பு உள்ளது. இப்படியிருக்கும் போது நான் எப்படி போதை பொருளை பயன்படுத்த முடியும். அதே போல் போதை பொருள் கும்பலுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதை பொருளை பயன்படுத்தவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து இவர் போதை பொருளை வாங்கி யாருக்காவது விற்றிருப்பாரா என்ற கண்ணோட்டத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவருடைய வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவர் மருத்துவ சான்றிதழை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

அதில் கடந்த ஆண்டு அவருக்கு ஆஞ்சியோ செய்ததற்கான சான்றிதழ் இருந்தது. அது போல் அவருக்கு இதய படபடப்பு இருப்பது, வாயுத் தொல்லை இருப்பதும் மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. இதனால் தன்னால் உயர்ரக போதை பொருளை பயன்படுத்த முடியாது என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+