என்னை மன்னித்துவிடுங்க.. பணத்தாசையில் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துவிட்டேன்.. பிரபல நடிகர் வருத்தம்
சென்னை: என்னை மன்னித்துவிடுங்க, பணத்தாசையில் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துவிட்டேன் என பிரபல நடிகர் லால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான லால் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். சண்டக்கோழி, சீமராஜா, டாணாக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா
அவர் கூறுகையில் கொரோனா ஊடரங்கின் போது எனக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன். இந்த விளையாட்டால் நாட்டில் பிரச்சினைகள் மற்றும் தற்கொலைகள் நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. மேலும் அரசு அனுமதியின் பேரில் இந்த விளம்பரத்தில் நடிக்க அழைத்ததாக நான் நினைத்தேன்.

விளம்பரம்
ஏற்கெனவே பல நடிகர்கள் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளதால் இது போன்று பிரச்சினை ஏற்படும் என நான் கருதவில்லை. பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டதால் மட்டுமே இந்த விளம்பரத்தில் நடித்தேன். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

இனி நடிக்க மாட்டேன்
இனிமேல் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் நடித்த இந்த விளம்பரத்தின் மூலம் யாரையாவது தவறான வழிக்கு கொண்டு போய்விட்டு அதனால் அவர்கள் கஷ்டப்பட்டிருந்தால் நிச்சயம் நான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என லால் கூறியுள்ளார்.

ரம்மி விளையாட்டு
இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விபரீதம் அறியாமல் ஷாரூக்கான், விராட் கோஹ்லி, பாடகர் விஜய் யேசுதாஸ், ரிமி டாமி போன்றோர் நடித்து வருவது குறித்து கேரளா சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த கேரளா இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடன் வாங்கி ரூ 21 லட்சத்தை இழந்தார்.

ஆன்லைன் ரம்மியால் பிரச்சினை
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதம் என கூறி அதை கேரள அரசு தடை செய்தது. ஆனால் இதை எதிர்த்து அந்த விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து கடந்த ஆண்டு ஆன்லைன் ரம்மிக்கான தடை நீக்கப்பட்டது .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications