Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் மதன் பாபு காலமானார்.. சென்னை இல்லத்தில் பிரிந்த உயிர்.. கண்ணீரில் திரையுலகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன் பாப் என்ற மதன் பாபு இன்று காலாமானர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதன் பாபுவின் உயிர் இன்று பிரிந்தது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மதன் பாப். இவரை மதன்பாபு என்று அழைப்பார்கள்.

100க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். குறிப்பாக நடிகர் விஜயின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

actor-madhan-babu-alias-madhan-bob-died-in-his-chennai-home

வித்தியாசமான சிரிப்பு

இவர் தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நிலைத்து நின்றார். சினிமா நடிகர் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அசத்த போவது யாரு? என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.

மதன் பாபு காலமானார்

மதன் பாபுவுக்கு தற்போது 71 வயது ஆனது. சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் மதன் பாபு இன்று காலமானார். இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது.

இருப்பினும் அவர் எந்த மாதிரியான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார ் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் அவருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

ஏ ஆர் ரஹ்மானின் குரு

மதன் பாபு தனது திரைப்பயணத்தை இசை கலைஞராக தொடங்கினார். சிறுவயதிலேயே கிட்டார் வாசிக்க கற்றுக்கொண்டார். ஆர்க்கெஸ்ட்ரா தொடங்கி இருந்தார். நாடகங்களுக்குப் பின்னணி இசை, சினிமா என்று பல்வேறு துறைகளில் தடம்பதித்தவர் தான் இந்த மதன் பாபு. மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்பட பல பிரபலங்களை வைத்து வெளிநாடுகளில் மதன்பாபு கச்சேரி நடத்தினார்.

‛இசைப்புயல்' ஏஆர்.ரஹ்மான், மதன்பாப் குழுவில் கீபோர்ட் வாசித்துள்ளார். மதன்பாபுவை தனது குரு என்று ஏஆர் ரஹ்மான் கூறியிருக்கிறார். மதன்பாபுவுக்கு உடற்பயிற்சி மீது அதீத பிரியம் உண்டு. சிறுவயது முதலே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் பாக்சிங்கிலும் அசத்தினார். ‛சார்பட்டா பரம்பரை' பாக்ஸர்களில் ஒருவராகவும் வலம் வந்தார்.

மதன் பாபுவின் குடும்பம்

மதன்பாபுவின் தந்தை பெயர் சுப்பிரமணியம். சுதந்திரப் போராட்டத்து பங்கெடுத்தவர். 'மதுரை மித்ரன்' என்ற பெயரில் பத்திரை நடத்தினார். முன்னாள் முத்வர் காமராஜரின் நண்பர் ஆவார். மன்பாபுவின் அம்மா பெயர் பொன்னம்மாள். இவர் கர்நாடக சங்கீதம் கற்றவர். பாட்டு வகுப்பு எடுத்து வந்தார்.

மதன் பாபுவின் மனைவி பெயர் சுசிலா. இவர் பாடகி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். மதன் பாபுவின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+