கொரோனா காலர் டியூன் நல்ல விஷயம்தான்.. ஆனால் "அதை" மட்டும் தவிர்த்தால் நல்லது.. நடிகர் மாதவன்
சென்னை: அனைத்து தொலைபேசி அழைப்புகளின் போது கொரோனா விழிப்புணர்வு ரிங் டோனால் மிரண்டு போயுள்ளதாக நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Recommended Video
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு மீன் கடையில் இருந்து பரவியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் எனும் அரக்கன் தொடர்ந்து உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. இதன் கடும் தாக்கத்தால் சீனாவில் மட்டும் 3000 பேர் பலியாகிவிட்டனர்.
உலகம் முழுதும் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40-க்கும் மேல் சென்றுவிட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய- மாநில அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

20 வினாடிகள்
அதன்படி பிஎஸ்என்எல், ஜியோ உள்ளிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளை அழைக்கும் போது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூன் வைக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் இருமல் சப்தம் கேட்கிறது. அதன் பிறகு ஆங்கிலத்திலும் இந்தியிலும் கொரோனா குறித்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த ரிங் டோனில், இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை மறைத்து கொண்டு செய்ய வேண்டும். தொடர்ந்து 20 வினாடிகள் கைகளை சுத்தமாக கழுவிவிட வேண்டும்.

சுகாதார மையம்
இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளிட்டோரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் முகத்தையோ மற்ற பாகங்களையோ தொடுவதற்கு முன்னர் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். தேவைப்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுகலாம் என்று அந்த எச்சரிக்கை டியூனில் கூறப்படுகிறது.
|
விருப்பம்
இதுகுறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டரில் கூறியிருக்கையில் இப்போது யாருக்கு போன் செய்தாலும் முதலில் இருமல் சப்தம் கேட்கிறது. அது என்னை மிரள வைக்கிறது. இது மத்திய சுகாதாரத் துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பின்னர்தான் தெரிய வருகிறது. மிகவும் சிறந்த பணி, சிறந்த விழிப்புணர்வு. ஆனால் அந்த இருமல் சப்தத்தை மட்டும் நீக்கி விடுங்கள். நான் போன் செய்யும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையே விரும்புகிறேன் என மாதவன் கூறியுள்ளார்.

இருமல் சப்தம்
ஆரம்பத்தில் இந்த இருமல் சப்தம் கேட்ட போது பலர் போனை எடுத்துவிட்டார்கள் என கருதி சார், மேடம், குறிப்பிட்ட பெயர்களை கொண்டு அழைத்தனர். பின்னர் கொரோனா விழிப்புணர்வு வாய்ஸ் மெசேஜை கேட்டவுடன் அவர்கள் புரிந்து கொண்டனர். எனவே மாதவன் கூறுவது போல் இருமல் சப்தத்தை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications