குளம் போல் தேங்கிய மழைநீரில் பாத் டப்பை படகாக்கி மன்சூர் அலிகான் பயணம்.. பாட்டு பாடும் வீடியோ வைரல்
சென்னை: சென்னையில் மழையால் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரில் நடிகர் மன்சூர் அலிகான் பாட்டுப் பாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றம் புறநகர்ப் பகுதியில் இரு தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
வங்கக் கடலில் காற்றின் உந்துதல் குறைந்த அழுத்தம் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

நுங்கம்பாக்கம்
எனினும் காற்று சுழன்று வருவதால் விட்டு விட்டு மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை சென்னையில் வெளுத்து வாங்கியது. இதனால் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சர்தர் படேல் சாலை, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் நிறைய தண்ணீர் தேங்கியுள்ளது.

கூடுவாஞ்சேரி
அது போல் வேளச்சேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் எழுந்துள்ளது.

மன்சூர் வீடு
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் வீடு அமைந்துள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் பாத் டப்பில் மன்சூர் அலிகான் கப்பல் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கணும்.. சென்னை தண்ணியில மிதக்கணும்.. தமிழனாக பிறக்கணும் சென்னையில் கார் ஓட்டி மகிழனும் என பாட்டு பாடினார்.

வெள்ளம்
கடந்த ஆண்டு நிவர் புயலின் போதும் நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் ஒரு பாத் டப்பை எடுத்துக் கொண்டு துடுப்பையும் வைத்து ஜெகமே தந்திரத்தில் வரும் ரகிட ரகிட பாடலை பாடி படகு பயணம் மேற்கொண்டார். அவர் ரகிட ரகிட பாடலின் வரிகளில் மக்கள் நலன் சார்ந்த வரிகளை போட்டு பாடினார். ஆ ரகிட ரகிட ரகிட என என்னவேணா நடக்கட்டும், நாம சந்தோஷமா வாழனும். ஆட்சியாளர்கள் மக்களைத்தான் சந்தோஷமா வைக்கணும்.. ரகிட ரகிட... ரகிட என்னவேணா நடக்கட்டும், நாம சந்தோஷமா வாழனும், ஆள்றவங்க மக்களை சந்தோஷமா வைக்கணும் .. ரகிட ரகிட.. ரகிட மீனவங்க வாழ்க்கையை கொஞ்சம் வாழத்தானே வைக்கணும்.. ரகிட ரகிட.... என பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications