இறந்துட்டாரா! சிவப்பு நிற டீசர்ட்டில் மாரிமுத்து தூங்குவது போல் இருக்கிறதே.. ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: நடிகர் மாரிமுத்து சிவப்பு, சாம்பல் நிற கோடுகள் கொண்ட டீசர்ட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது போல் இருக்கிறது என ரசிகர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டி வந்த நடிகர் மாரிமுத்துவுக்கு இன்று ஷூட்டிங் இல்லை. அதனால் அவர் ஸ்டூடியோவுக்கு சென்றுவிட்டு டப்பிங் பேசிவிட்டு வீடு திரும்பினார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஹரிபிரியா, கதிர் கேரக்டரில் நடித்த நடிகர், கரிகாலன் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது உடல் வந்ததும் அவருடைய மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது.
அவரது உடலை ஐஸ் பெட்டியில் வைத்த போது சிவப்பு , சாம்பல் நிற டீசர்ட், கருப்பு நிற பேன்ட் அணிந்திருக்கிறார். ஏதோ படுத்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. அவர் இறந்தது போல் தெரியவில்லை என ரசிகர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள். இந்த காட்சி எதிர்நீச்சலில் ஒரு சீனாக இருக்கக் கூடாதா என கேட்கிறார்கள்.
அந்த அளவுக்கு அவரது முகத்தில் இறந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லாமல் அப்படியே படுத்திருப்பது போல் இருக்கிறது. ஆதி குணசேகரனாக மிரட்டினாலும் அவரது உச்சகட்ட நடிப்பின் மூலம் ரசிகர்கள் தனக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு கட்டி போட்டார். இதுவரை சின்னத்திரையில் வில்லனுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருந்திருக்குமா என தெரியவில்லை.
அண்மையில் ஜெயிலர் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதில் அவர் தஞ்சாவூர் ஜில்லாகாரி என பாடும் போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்ந்தது. இந்தியன் 2 படத்திலும் நடித்து வந்தார். சூட்டிங் ஸ்பாட்டில் கலகலவென அனைவரிடமும் காமெடியாக பேசி மகிழ்வாராம். தற்போதுதான் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் இவர் இறந்துவிட்டாரே என திரைப்பிரபலங்களும் இவருடைய வளர்ச்சியை பார்த்தவர்களும் தெரிவிக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications