10 செகண்ட்தான்.. நாங்கள் அப்படி செய்திருந்தால் அம்மா உடைந்து போயிருப்பார்.. மயில்சாமி மகன் உருக்கம்
நடிகர் மயில்சாமியின் மகன்களுக்கு இந்த சிறிய வயதிலும் எத்தனை பக்குவம்?
சென்னை: நடிகர் மயில்சாமியின் மகனுக்கு இந்த சின்ன வயதிலும் எத்தனை பக்குவம் என்பது அவருடைய பேட்டியில் இருந்து தெரிகிறது. அதைவிட மயில்சாமி தனது பிள்ளைகளுக்கு எத்தனை நல்ல குணங்களை கற்றுக் கொடுத்துள்ளார் என்பதை நினைக்கும் போது ரசிகர்கள் நெகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.
பிறப்பு, இறப்பு என்பதெல்லாம் வாழ்வில் சகஜம்தான். பிறப்பு என ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு என்ற ஒன்று இருக்கும். நாள்தோறும் கண்ணுக்கு தெரியாத நிறைய பேர் இறக்கிறார்கள். அதற்கெல்லாம் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன. திரை பிரபலமோ, அரசியல் பிரபலமோ, விளையாட்டு பிரபலமோ, தொலைகாட்சி பிரபலமோ இறந்துவிட்டால் அவரின் சொந்த பந்தம் உள்பட அவருடைய ஆதரவாளர்கள், ரசிகர்கள் என மனவேதனை அடைகிறார்கள்.
அதைவிட அவரது இறப்பு எதனால் நடந்தது என தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வமும் இருக்கிறது. இது போன்ற சம்பவங்களை நிறைய பார்த்துள்ளோம். அண்மையில் நடந்த மயில்சாமியின் இறப்புக்கு கூட ரசிகர்கள் காரணம் தேடி வருகிறார்கள்.

சிவராத்திரி
மயில்சாமி சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில் தனது மனைவி, மகனுடன் வீடு திரும்பினார். பின்னர் அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மயில்சாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அஞ்சலி
இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருடைய இறப்புக்கு என்ன காரணம் என ஆளாளுக்கு ஒவ்வொன்றை கூறி வருகிறார்கள். ஒரு சிலர் அவரது இறப்புக்கு குடிப்பழக்கம்தான் காரணம் என்கிறார்கள். ஒரு சிலர் கோயிலிலேயே மயில்சாமி இறந்துவிட்டார் என்றார்கள். இன்னும் சிலரோ டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டிருந்த போது இறந்துவிட்டார் என்றார்கள்.

சரியல்ல
ஆனால் இவை எதுவுமே சரியல்ல என்பதும் எல்லாமே யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவை என்றும் அவருடை மகன்கள் அளித்த பேட்டியில் தெரியவந்தது. தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அவரது மகன்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் விவரித்தனர். அவர்கள் கூறுகையில் கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்த போது அப்பாவுக்கு பசிக்கிறது என்றார், நான்தான் உணவு சமைத்து கொடுத்தேன். அதை சாப்பிட்டார், பிறகு சிறிது நேரத்தில் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்பது போல் இருப்பதாக சொன்னார். உடனே நான் குடிப்பதற்கு வெந்நீர் கொடுத்தேன். இதையடுத்து சிறிது நேரம் கழித்து நான் தூங்க போனதும் அம்மா என்னை வந்து அழைத்தார்.

அப்பாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம்
அப்பாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் என ! போய்பார்த்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்றார்கள். இதுதான் நடந்தது என அவரது மகன்கள் தெரிவித்தனர். மயில்சாமியின் உடலை பார்த்ததும் மனதிற்குள்ளேயே வெம்பி அழுத இரு மகன்களும் கதறி அழுதது அவர்களது இறுக்கமான முகத்தில் தெரிந்தது. அது போல் நண்பர் போய்விட்டாரே என கதறி கொண்டு வந்தவர் பிரபலங்களுக்கும் இவர்கள் இருவரும் ஆறுதல் சொல்லி தேற்றினர்.

பிரபலங்கள்
அது போல் இவர்கள் இருவரையும் பிரபலங்கள் எல்லாம் குழந்தைகள் என்றே மயில்சாமியின் இரங்கல் பேட்டிகளில் தெரிவித்தனர். ஆனால் இந்த குழந்தைகளுக்குத்தான் எத்தனை பக்குவம்? தாம் கலங்கினால் தனது தாயும் கதறி துடிப்பாரே என எண்ணி அத்தனை துக்கத்தையும் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டனர். உண்மையில் இவர்களது நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. இதை மயில்சாமியின் மகனே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மயில்சாமியின் மகன் பேட்டி
இதுகுறித்து மயில்சாமியின் மகன் யுவன் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் நான் அப்பா இறந்தவுடன் அருண் விஜய் அண்ணாவுக்கு போன் செய்து ஒரு 10 செகன்ட் அழுதேன். அதன் பிறகு அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த வர்றவங்களை எல்லாம் நானும் அண்ணனும் சமாதானப்படுத்தி உட்கார வைத்தோம். இதில் நாங்கள் அந்த அளவுக்கு அழாமல் இருந்ததற்கு காரணம் நாங்கள் அழுவதை பார்த்து அம்மா மேலும் உடைந்து விடக் கூடாதே என்பது என தெரிவித்தார். இந்த சிறிய வயதில் கூட எத்தனை பக்குவம் இவர்களுக்கு என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications