நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர்.. "சித்தி" நாடகத்தில் அறிமுகம்.. யார் இந்த டேனியல் பாலாஜி
சென்னை: நடிகை ராதிகாவின் சித்தி தொடரில் டேனியல் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆகி வெள்ளித்திரையிலும் வில்லன் கதாப்பத்திரங்களில் தனித்துவம் காட்டிய டேனியல் பாலாஜி நடிகர் முரளிக்கு நெருங்கிய உறவினரும் ஆவார். டேனியல் பாலாஜி தமிழ் படங்களில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலாமானர். 48 வயதான டேனியல் பாலாஜி வில்லன் கதாப்பாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். நெஞ்சுவலி ஏற்பட்டு கொட்டி வாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடித்த திரைப்படங்கள்: இதையடுத்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, பிகில், வட சென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறைவினர் ஆவார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
டேனியல் பெயர் எப்படி வந்தது?: 1975 ஆம் ஆண்டு பிறந்த டேனியல் பாலாஜி, சென்னை தரமணி திரைப்பட நிறுவனத்தில் திரைப்பட இயக்கப் படிப்பை முடித்தார். கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்ஷன் மேனேஜராக டேனியல் பாலாஜி தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். ராதிகா நடிப்பில் பிரபலம் ஆன சின்னத்திரை தொடரான 'சித்தி' தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் அவரது பெயர் டேனியல் பாலாஜி என மாறியது.
முதல் படம் எது?: ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் இவர் திரையுலகில் அறிமுகம் ஆகினார். அதைத் தொடர்ந்து தனுஷின் காதல் கொண்டேன், சூர்யாவுடன் காக்க காக்கவில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். முத்திரை என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். பிளாக் படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் டேனியல் பாலாஜி அறிமுகம் ஆனார். மோகன் லால் நடித்த பகவான், மம்மூட்டி நடித்த டாடி கூல் ஆகிய படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications