நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்த அவதூறு! யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார்
சென்னை: நடிகரும் நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டதாக யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படம் 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில் ஏதோ காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் சுந்தர் சி, குஷ்பு, நடிகர் விஷால், நடிகைகள் வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். அப்போது விஷால் பேசும் போது அவர் கைகள் நடுங்கின. முகமும் வீக்கமாக இருந்தது. அவர் பேசிய போது வார்த்தைகள் குழறின. இதனால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் குழம்பினர். பிறகு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி வந்து, விஷாலுக்கு அதிக காய்ச்சல் என்பதால் அவருக்கு உடல்நிலை பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்.
காய்ச்சல் என்றால் உடல் சோர்வாக இருக்குமே தவிர கைகள் மட்டும் எப்படி நடுங்கும் என கேள்வி எழுந்தது. இதனால் விஷாலுக்கு என்ன ஆச்சு என சமூகவலைதளங்கள் முழுக்க கேள்வி எழுந்தது.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையும் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அறிக்கை விட்டது. இந்த நிலையில் மதகஜராஜா திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு விஷால் வந்ததை பார்த்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது விஷாலின் கைகள் நடுங்கவில்லை.அவரும் தான் நன்றாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
விஷால் தான் நலமாக இருப்பதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு ஏன் கை நடுங்கியது என்பது குறித்து சில யூடியூப் சேனல்கள் பிரபல சினிமா பத்திரிகையாளர்களை வைத்து விவாதித்தன. அந்த வகையில் ஒரு சில யூடியூப் சேனல்களில் விஷாலின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியிருந்ததாக சொல்லப்படுகிறது.
இதை கண்டித்து நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் குறிப்பிட்ட யூடியூப் சேனல் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications