வயிற்றில் இருக்கும் கருவையே கலைத்தவர்! மணப்பெண் பகீர் குற்றச்சாட்டு.. அதிர்ந்த நெப்போலியன்!
சென்னை: பெண் பார்க்கும் படலத்தின் போது நடிகர் நெப்போலியனை திருமணம் செய்து கொள்ள அவரது மனைவி ஜெயசுதா மறுப்பு தெரிவித்த சுவாரஸ்யமான சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் நெப்போலியன் கிழக்கு சீமையிலே. சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பார். உயரமான நபர், சினிமாக்களில் கரடு முரடாக காட்சி தரும் ஹீரோவாக வலம் வந்தவர் நெப்போலியன். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடித்துள்ளார். முற்றிலும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். அமைச்சர் கே.என். நேரு இவருக்கு மாமா முறையாகும். சிறு வயதிலேயே திமுகவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட நெப்போலியன் திமுகவில் இணைந்தார்.

சட்டசபை தேர்தல்
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பெரம்பலூர் எம்பியாக நெப்போலியன் தேர்வானார். அப்போது மத்தியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.

மத்திய இணையமைச்சராக இருந்தார்
இதையடுத்து இவர் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக பதவியேற்றார். இவர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்படுகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவை விட்டு வெளியேற்றிய போது நெப்போலியனும் வெளியேற்றப்பட்டார்.

பாஜகவில் நெப்போலியன்
இதையடுத்து அதே ஆண்டு பாஜக தலைவராக இருந்த அமித்ஷாவை நேரில் சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். ஜீவன் டெக்னாலஜீஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

குமரேசன்
இவர் சித்ரா லட்சுமணன் நடத்தும் சாய் வித் சித்ரா எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது குமரேசன் என்ற எனது பெயரை இயக்குநர் பாரதிராஜா அவர்கள் நெப்போலியன் என மாற்றுவதாக தெரிவித்தார். அய்யய்யோ நெப்போலியன் பாட்டில் பேராச்சே, நம்மை கிண்டல் செய்வார்களே என தயங்கினேன். இருந்தாலும் இதை இயக்குநரிடம் சொல்ல முடியாது என்பதால் அமைதியாகிவிட்டேன்.

இயக்குநர் வைத்த பெயர்
எனது நண்பர்கள் எல்லாம் என்னிடம் கேட்டார்கள். "உனக்கு இயக்குநர் பெயர் வைக்க போகிறார் என சொன்னாரே என்ன பெயர்?" என கேட்டனர். அதற்கு நான் நெப்போலியன் என சொன்னேன். என்னாது நெப்போலியனா, ஏன் ஓல்டு மாங்க், ராயல் பிராண்டினு வச்சிக்க வேண்டியதுதானே" என கிண்டல் செய்தார்கள். இதற்கு நான் கூறினேன், ரமேஷ், சுரேஷ், என வைத்தால் அது தமிழ் ஹீரோக்கள், அமிதாப், ஷாரூக் என வைத்தால் இந்தி பட ஹீரோக்கள், எனது பெயர் உலகம் முழுக்க தெரியும். அதனால் நான் ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் என் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றேன். அப்படி சொல்லிய வாய் முகூர்த்தம் ஹாலிவுட் படங்களிலும் நடித்துவிட்டேன்.

மனைவி
என் மனைவி கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது அவரது ஜாதகத்தையும் என்னுடைய ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்தனர். 9 பொருத்தம் வந்தது. இதையடுத்து என் மனைவி அப்போது கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். பெண் பார்க்கும் படலத்திற்காக நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது என் மனைவி யார் மாப்பிள்ளை என கேட்டார். அதற்கு என்னை காட்டிய உறவினர்கள், இவர் நடிகராக உள்ளார் , நெப்போலியன் இவரது பெயர் என்றனர்.

வில்லன் வேண்டாம்
உடனே எனது மனைவி முடியாது இவர் எனக்கு வேண்டாம் என்றார். எல்லோரும் ஏன் என கேட்டனர். அதற்கு என் மனைவி , இவர் எஜமான் படத்தில் வயிற்றில் உள்ள கருவையே கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரர், இவருடன் எப்படி குடும்பம் நடத்துவது என கேட்டார். பின்னர் அதெல்லாம் சினிமா, நிஜத்தில் நல்லவர், விசாரிக்காமல் பெண் கொடுப்பேனா என எனது மாமனார், சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். இவ்வாறு நெப்போலியன் தெரிவித்தார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே!












Click it and Unblock the Notifications