”ராகுல்லா ரசகுல்லா வாங்குறது..கேள்விக்குறி” அப்படியே இருக்காரே! ட்ரேட்மார்க் பதில் சொன்ன பார்த்திபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுல் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்காக சாலை தடுப்பை தாண்டி எகிறி குதித்து சென்று இனிப்பு வாங்கி கொடுத்ததை நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைலில் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் "பார்த்திபன் சார் அந்த கிண்டல் உங்களை விட்டு போகல" என பதிவிட்டு வருகின்றனர்

சமூக வலைதளங்கள் முழுக்க ராகுல் காந்தியின் செயல் தான் ஆக்கிரமித்து உள்ளது. பிரச்சாரத்திற்காக கோவை வந்த அவர் தனது காரை திடீரென நிறுத்தி இறங்கி சாலையில் நடக்க தொடங்கினார்.

Actor Parthiban praised Congress MP Rahul Gandhi for buying sweets for Chief Minister Stalin

தொடர்ந்து சிறுது தூரம் நடந்து சென்ற அவர் சாலை தடுப்பை சாதாரணமாக தாண்டி குதித்து எதிரே இருந்த இனிப்பு கடைக்குள் சென்றார்.

ராகுல் காந்தி: அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோரும் சென்ற நிலையில் கடையில் இருந்தவர்களுடன் மிகவும் சகஜமாக பேசி அங்கும் இங்கும் உலாவிய ராகுல் காந்தி கடையில் இருந்த சில இனிப்புகளை வாங்கி ருசி பார்த்தார். தொடர்ந்து இந்த கடையில் என்ன ஸ்பெஷல் என கேட்டு மைசூர்பாவை பார்சல் வாங்கிக் கொண்டார். மேலும் கடையில் இருந்த பெண்கள் உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்க அதற்கென்ன வாங்க வாங்க என மகிழ்ச்சியாக கூறி அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ராகுலுக்கு பாராட்டு: தொடர்ந்து அங்கிருந்து சென்றவர் பொதுக்கூட்ட மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசிய போது தான் கையோடு வாங்கி இருந்த இனிப்பையும் பகிர்ந்தார். இதனால் மகிழ்ந்து போன ஸ்டாலின் எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க ரொம்ப நன்றி என கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறது என்றே கூறலாம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தொடங்கி திமுக எம்பி கனிமொழி வரை பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அந்த வீடியோவை பகிர்ந்து ராகுலை புகழ்ந்து வருகின்றனர்.

முதலமைச்சர் நன்றி: மேலும் கட்சி சார்பற்ற பலரும் ராகுல் காந்தியின் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர் . மேலும் சிறு பிள்ளை போல உற்சாகமாக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டிச் சென்றதை பற்றி பலரும் ஆச்சரியத்தோடு பேசி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் நன்றி கூறியிருந்தார். அதில்"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றியை ராகுல் காந்திக்கு இனிப்பான பரிசாக வழங்கும்' எனக் கூறியிருந்தார்.

பார்த்திபனின் பதிவு: இந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்து "ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் வாங்குகிறதே.. அடடே ஆச்சரிய குறி" என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோவை தன்னுடைய ஸ்டைலில் புது வசனத்துடன் பகிர்ந்து இருக்கிறார் நடிகர் பார்த்திபன். பொதுவாகவே வித்தியாசமான சிந்தனை வித்தியாசமான சொல்லாடல்களை பயன்படுத்தி வரும் பார்த்திபன் தனது ட்ரேட் மார்க் வசனமான ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறது என்ற டயலாக்கை ராகுலுக்காக முற்றிலுமாக மாற்றி இருக்கிறார். அதில் "ராகுல்லா ரசகுல்லா வாங்குறது கேள்விக்குறி" என பகிர்ந்திருக்கிறார். இதை அடுத்து பலரும் பார்த்திபனுக்கு இன்னும் அந்த குறும்புத்தனம் போகவில்லை என அவரது பதிவை மறு பதிவு செய்து வருகின்றனர்.

Actor Parthiban praised Congress MP Rahul Gandhi for buying sweets for Chief Minister Stalin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+