எனக்கு சாதியே வேண்டாம்.. பார்த்திபன் எடுத்த முடிவு! ஆனா இது மட்டும் போதாது!
சென்னை: இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன், தனது சாதி குறித்து சமீபத்தில் பெருமையாக பேசியிருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தான் 'No caste, NO religion' சான்றிதழ் வாங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நான் இந்த சாதிக்காரன் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதில், இன்னொரு சமூகத்தை நாம் நமக்கு கீழே உள்ளதாக கருதுகிறோம் என்கிற உண்மை இருக்கிறது. இப்படி இருக்கையில், பார்த்திபனின் பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

சாதி சொருகல்
தெலுங்கு சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன், தான் இந்த சமூகத்தை சேர்ந்தவன்தான் என்று பெருமையாக கூறியிருந்தார். அப்படியெனில் மற்ற சமூகங்கள் எல்லாம் இவருக்கு கீழே என்பதை தெரிவிக்க விரும்புகிறாரா? அல்லது, நான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோருகிறாரா? கலை என்பது அதன் தரத்தை வைத்துதான் ரசிக்க முடியும். அப்படி இருக்கையில் இடையில் இந்த சாதி சொருகல் எங்கிருந்து வந்தது? என்று கேள்வி எழுந்தது.
சரமாரி கேள்வி
மட்டுமல்லாது, இத்தனை ஆண்டுகளாக பார்த்திபன் திரைத்துறையில் தன்னை இப்படித்தான் தக்க வைத்துக்கொண்டாரா? என்று கேள்வியும் எழுந்தது. அவர் நடித்த படங்கள், அவர் இயக்கிய படங்கள் எல்லாம், அவருடைய சாதியை காண்பித்துதான் அதற்கான வாய்ப்புகளை பெற்றாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். மட்டுமல்லாது, அவருடைய படைப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட சாதி மக்களுக்காகத்தான் இருக்கிறதா? என்றும் வீரியமாக கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியிருந்தனர்.
No caste, NO religion
இதனால், பார்த்திபன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தான் 'No caste, NO religion' சான்றிதழ் வாங்க தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சான்றிதழால் சாதி ஒழிந்துவிடுமா
உண்மையில் இந்த 'No caste, NO religion' சான்றிதழ் மூலமாக எல்லாம் சாதி ஒழிந்தவிடாது. சாதி என்பது பேப்பரில் இல்லை. அது மனதில்தான் இருக்கிறது. எனவே பார்த்திபன் இந்த சான்றிதழை வாங்கினாலும், சாதி இல்லை என்கிறபடி நடந்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.
குறிப்பாக, ப்ளூ சட்டை மாறன், "சான்றிதழ் வைத்திருந்தால் போதாது. அதை செயலில் காட்ட வேண்டும். சாதிப்பெருமை மற்றும் பெண்களை தவறாக பேசுவதும்.. பிறகு வருத்தம், மன்னிப்பு கேட்பதும் மக்களிடம் எடுபடாது" என்று கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications