எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாட்டிற்கு நன்றி.. கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உயிரே, உறவே, தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்வதாக கூறிய கமல்ஹாசன், தக் லைஃப் திரைப்படம் சர்வதேச தரத்துடன் உருவாகி இருப்பதாக கூறியுள்ளார்.

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்று பேசி இருந்தார். கமல்ஹாசனின் இந்த வார்த்தைகள் சர்ச்சையாகியது.

Actor-politician Kamal Haasan thanks Tamil Nadu for their support ahead of thug life release tomorrow

தக் லைஃப்-க்கு தடை

இதனால் கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகா அரசியல் கட்சிகள், அமைப்புகள், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை, நீதிமன்றம் என்று அனைத்து தரப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றன்ர். இல்லையென்றால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாது என்று தெரிவித்தனர்.

நாளை தக் லைஃப் ரிலீஸ்

ஆனால் கமல்ஹாசன் பொருளாதார இழப்புக்காக மன்னிப்பு கேட்கவில்லை. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் கர்நாடகாவில் நாளை தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகவில்லை. கர்நாடகா தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும், மாநிலங்களிலும், மொழிகளிலும் தக் லைஃப் நாளை ரிலீஸாக உள்ளது.

கமல்ஹாசன் பேட்டி

இந்த நிலையில் தக் லைஃப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் பேசுகையில், சர்வதேச தரத்தில் தக் லைஃப் படம் உருவாகி இருக்கிறது. மணி ரத்னம் ஒரு சினிமா ஞானி. அவருடன் வேலை செய்வது எனக்கு குதூகலமாக உள்ளது. சிறந்த டெக்‌னிஷியன்கள் பதற்றம் இல்லாமல் பணியாற்றி இருக்கிறார்கள்.

சினிமா வெல்ல வேண்டும்

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பே மருதநாயகம் படத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். அதனை பாதியிலேயே கைவிட்டுவிட்டோம் என்ற வருத்தம் உள்ளது. இந்த படத்தில் இன்னும் சிறப்பாக கூடுதல் அனுபவத்துடன் வந்து பணியாற்றியுள்ளார். வியாபாரம் வெற்றி பெற வேண்டும். அதனைவிட என் சினிமா வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.

மணி ரத்னம் பணிகள்

தமிழ் சினிமாவை புரட்டிப்போட நினைக்கிறோம். ராஜ் கமல் இண்டர்நேஷனல் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தை மணி ரத்னம் அளித்திருக்கிறார். சின்னச்சின்ன கதாபாத்திரத்தில் கூட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள். அவர்களின் திறமையை பற்றி பேசுவதற்கு இன்னொரு விழா நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டிற்கு நன்றி

அதேபோல் எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்.. நான் மேடையில் பேசும் போது, உயிரே.. உறவே.. தமிழே.. என்று சொன்ன அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தக் லைஃப் தடை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, மற்றொரு நாளில் இதனை பற்றி பேசுவேன் என்று கமல்ஹாசன் உறுதி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+